பக்க விளைவுகள் இல்லாத 'பக்கா' ஜாம்! உங்கள் கிச்சனில் செய்ய வேண்டிய 10 சிறந்த ஜாம்கள்!

நான்சி மலர்

டைகளில் வாங்கும் ஜாம்களில் சேர்க்கப்படும் செயற்கை நிறமூட்டிகள் மற்றும் Preservatives இல்லாமல் வீட்டிலேயே எளிமையாகவும், ஆரோக்கியமாகவும் செய்யக்கூடிய 10 ஜாம் வகைகள்.

Jams

தக்காளி ஜாம் பார்ப்பதற்கு தக்காளி தொக்கு போன்ற இனிப்புச் சுவையுடன் இருக்கும். இது கிராமப்புறங்களில் மிகவும் பிரபலம்.

Tomato jam

நெல்லிக்காய் ஜாம் 'தேன்பாகு' ஜாம் போலச் செய்து நீண்ட நாள் சேமிக்கலாம். வைட்டமின் C நிறைந்தது.

Amla jam

கொய்யாப்பழத்தைச் வேக வைத்து வடிகட்டி ஜாம் போலச் செய்யலாம். இதை பிரட், சப்பாத்தி, தோசையுடன் தொட்டுச் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

Guava jam

கறுப்பு திராட்சையில் கொட்டை நீக்கி செய்யும் போது ஜெல்லி போன்ற பதத்தில் திராட்சை ஜாம் கிடைக்கும்.

Grapes jam

பப்பாளி ஜாம் மிகவும் மலிவானது மற்றும் சத்தானது. குழந்தைகள்கூட இதை விரும்பி உண்பார்கள்.

Papaya jam

அன்னாசி ஜாம் புளிப்பும், இனிப்பும் கலந்த ஒரு வித்தியாசமான சுவையைத் தரும். பிரட், சப்பாத்திக்கு அருமையாக இருக்கும்.

Pineapple jam

மாம்பழ ஜாம் கோடை காலத்தில் செய்ய ஏற்றது. அல்போன்சா, பங்கனப்பள்ளி மாம்பழம் இதற்குச் சிறந்தது.

Mango jam

ஆப்பிள் ஜாம் அதிக Pectin சத்து கொண்டது. இலவங்கப்பட்டை சேர்த்தால் மணம் தூக்கலாக இருக்கும்.

Apple jam

ஸ்ட்ராபெர்ரி ஜாம் புளிப்பு, இனிப்பு சுவை கொண்டது. செய்வதும் மிக எளிது.

Strawberry jam

மிக்ஸ்டு ஃப்ரூட் ஜாம் ஆப்பிள், பப்பாளி, வாழைப்பழம் என எல்லா பழங்களையும் கலந்து செய்வது. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். நல்ல சிவப்பு நிறத்தில் உள்ள பழங்களைத் தேர்ந்தெடுத்தால் ஜாம் இயற்கையான நிறத்துடன் இருக்கும்.

Mixed fruit jam
Jelly Fish
ஜெல்லி மீன்கள்: 10 விசித்திரமான உண்மைகள்!