வழக்கமான பொரியல் போரடிக்குதா? அப்போ இந்த ட்ரெண்டிங் வாழைக்காய் ரெசிபிகளை ட்ரை பண்ணுங்க!

நான்சி மலர்

Raw banana recipes

1. வாழைக்காய் வறுவல்: வாழைக்காயை மெல்லிய வட்டமாக நறுக்கி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், சோம்பு மற்றும் உப்பு சேர்த்து தோசைக் கல்லில் மொறுமொறுப்பாக பொரித்து எடுப்பது.

Raw banana recipes | Gemini image

2. வாழைக்காய் சிப்ஸ்: கேரள முறைப்படி வாழைக்காயின் தோலை நீக்கி, சீவி மிளகாய் தூள் அல்லது மிளகுத்தூள், உப்பு சேர்த்து வெளிச்சண்ணெயில் பொரித்து எடுக்கப்படும் நறுமுறுப்பான சிப்ஸ்.

Raw banana recipes | Gemini image

3. வாழைக்காய் பொரியல்: பொடியாக நறுக்கிய வாழைக்காயை கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் தாளித்து, தேங்காய் துருவல் சேர்த்து செய்யும் பாரம்பரிய பொரியல்.

Raw banana recipes | Gemini image

4. வாழைக்காய் கோலா உருண்டை: வேகவைத்த வாழைக்காய், பொட்டுக்கடலை மாவு, சோம்பு, பூண்டு, வெங்காயம் மற்றும் மிளகாய் சேர்த்து உருண்டையாகப் பிடித்து எண்ணெயில் பொரித்து எடுக்கும் சுவையான ஸ்நாக்ஸ்.

Raw banana recipes | Gemini image

5. வாழைக்காய் மசாலா / கிரேவி: தக்காளி, வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுதுடன் மசாலாப் பொடிகள் சேர்த்து, நறுக்கிய வாழைக்காயை குக்கரில் வேகவைத்து அல்லது கிரேவியாக சுருள வதக்கி சப்பாதியுடன் பரிமாறலாம்.

Raw banana recipes | Gemini image

6. வாழைக்காய் கட்லெட்: வேகவைத்த வாழைக்காய் மற்றும் உருளைக்கிழங்குடன் மசாலாப் பொருட்கள் சேர்த்து, பிரெட் கிரம்ஸில் புரட்டி தோசைக் கல்லில் பொன்னிறமாக சுட்டு எடுக்கும் கட்லெட்.

Raw banana recipes | Gemini image

7. வாழைக்காய் போண்டா: கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், பெருங்காயம் கலந்த மாவில் நறுக்கிய வாழைக்காய் துண்டுகளைத் முக்கி எண்ணெயில் பொரித்து எடுப்பது

Raw banana recipes | Gemini image

8. வாழைக்காய் அவியல்: கேரளத்து பாரம்பரிய அவியல் முறையில், வாழைக்காயுடன் காய்கறிகளைச் சேர்த்து, தேங்காய்-சீரகம்-பச்சை மிளகாய் விழுது மற்றும் தயிர் சேர்த்து செய்யும் ஆரோக்கியமான கூட்டு.

Raw banana recipes | Gemini image

9. வாழைக்காய் பிரியாணி / சாதம்: பொடியாக நறுக்கி வதக்கிய வாழைக்காயை காரசாரமான மசாலாவுடன் சேர்த்து பாசுமதி அரிசியுடன் கலந்து செய்யும் மசாலா சாதம் அல்லது பிரியாணி வகை.

Raw banana recipes | Gemini image

10. வாழைக்காய் கூட்டு: பாசிப்பருப்புடன் வாழைக்காயைச் சேர்த்து வேகவைத்து, தேங்காய் மற்றும் சீரகம் அரைத்து ஊற்றி, மிளகு தாளித்து செய்யும் சாப்பாட்டுக்கு ஏற்ற சுவையான கூட்டு.

Raw banana recipes | Gemini image
Potato Moong Dal Cheese Balls | Gemini image
10 நிமிடத்தில் செம கிரிஸ்பி ஈவினிங் ஸ்நாக்ஸ்! குழந்தைகளை அசத்த இதை உடனே ட்ரை பண்ணுங்க!