சமையல் வேலையை எளிதாக்கும் 10 சூப்பர் குறிப்புகள்!

கிரி கணபதி

சமையல் கலை என்பது ஒரு கடல் போன்றது. அதில் சில எளிய நுணுக்கங்களை தெரிந்து கொண்டால், சமையல் செய்வது ஒரு சுமையான வேலையாக இல்லாமல், மிகவும் சுலபமாகவும் சுவாரஸ்யாகவும் மாறிவிடும்.

Kitchen Tips

1. பூண்டு உரிப்பது இனி ஈஸி:

பூண்டு பற்களை உரிப்பதற்கு கடினமாக இருந்தால், அவற்றை வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். அதன் பிறகு தோல் மிக எளிதாக வந்துவிடும்.

Kitchen Tips

2. எலுமிச்சை சாறு அதிகம் கிடைக்க:

எலுமிச்சைப் பழத்தை நறுக்குவதற்கு முன், அதைத் தரையில் வைத்து உள்ளங்கையால் லேசாக அழுத்தி உருட்டவும். அல்லது வெதுவெதுப்பான நீரில் சில நொடிகள் போட்டு எடுத்தால் சாறு பிழியும்போது அதிக அளவு சாறு கிடைக்கும்.

Kitchen Tips

3. பால் பொங்கி வழியாமல் இருக்க:

பாலைக் காய்ச்சும்போது பாத்திரத்தின் மேல் ஒரு மரக்கரண்டியை குறுக்காக வைத்துவிட்டால், பால் பொங்கி வெளியே வழிவதைத் தடுக்கலாம்.

Kitchen Tips

4. சர்க்கரையில் எறும்பு வராமல் தடுக்க:

சர்க்கரை டப்பாவில் எறும்புகள் மொய்ப்பது வழக்கம். இதைத் தடுக்க, அந்த டப்பாவிற்குள் நான்கைந்து கிராம்புத் துண்டுகளைப் போட்டு வைத்தால் எறும்புகள் வராது.

Kitchen Tips

5. உப்பு அதிகமானால் கவலை வேண்டாம்:

குழம்பிலோ, ரசத்திலோ உப்பு அதிகமாகிவிட்டால், ஒரு உருளைக்கிழங்கைத் தோல் சீவி நான்காக வெட்டிப் போடவும். அல்லது பிசைந்த கோதுமை மாவு உருண்டையைப் போடலாம். இவை அதிகப்படியான உப்பை உறிஞ்சிவிடும்.

Kitchen Tips

6. வெங்காயம் நறுக்கும்போது கண்ணீர் வராமல் இருக்க:

வெங்காயத்தை நறுக்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன் ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு நறுக்கினால் அல்லது தோலை உரித்துவிட்டு குளிர்ந்த நீரில் சிறிது நேரம் போட்டுவிட்டு நறுக்கினால் கண்ணீர் வருவதைத் தவிர்க்கலாம்.

Kitchen Tips

7. இட்லி பூப்போல மென்மையாக வர:

இட்லி மாவு அரைக்கும்போது, உளுந்துடன் சிறிது வெந்தயத்தையும் சேர்த்து ஊறவைத்து அரைத்தால் இட்லி மிகவும் மென்மையாகவும், வாசனையாகவும் இருக்கும்.

Kitchen Tips

8. பச்சை மிளகாய் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க:

பச்சை மிளகாயை வாங்கியவுடன் அதன் காம்புகளை நீக்கிவிட்டு, ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்கள் நிறம் மாறாமல் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.

Kitchen Tips

9. கரிந்த பாத்திரத்தைச் சுத்தம் செய்ய:

பாத்திரம் அடிப்பிடித்து கரிந்துவிட்டால், அதில் சிறிது வினிகர் மற்றும் பேக்கிங் சோடாவைப் போட்டுத் தேய்த்தால் அல்லது கொதிக்க வைத்தால், கரிந்த கறைகள் எளிதில் நீங்கிவிடும்.

Kitchen Tips

10. சப்பாத்தி நீண்ட நேரம் மென்மையாக இருக்க:

சப்பாத்திக்கு மாவு பிசையும்போது, சாதாரண தண்ணீருக்குப் பதிலாக வெதுவெதுப்பான தண்ணீர் அல்லது காய்ச்சிய பால் சேர்த்துப் பிசைந்தால், சப்பாத்தி நீண்ட நேரம் வரை மிகவும் மென்மையாக இருக்கும்.

Kitchen Tips
Ramana-Maharshi
ரமண மகரிஷி அருளிய சில நல்லுரைகள்!