நான்சி மலர்
1/10. உறங்கும் போது மெல்லிய மற்றும் தளர்வான பருத்தி ஆடைகளை அணியுங்கள். இது வியர்வையை உறிஞ்சி காற்றோட்டத்தை வழங்கும்.
2/10. ஜன்னல் ஓரம் ஒரு ஈரமான துணியையோ அல்லது போர்வையையோ தொங்கவிடலாம். இதன் வழியாக வரும் காற்று இயற்கையாகவே குளிர்ந்து அறைக்குள் வரும்.
3/10. செயற்கை இழை (Synthetic) விரிப்புகளைத் தவிர்த்து, 100% காட்டன் பெட்ஷீட்களைப் பயன்படுத்துங்கள். இவை வெப்பத்தை தேக்கி வைக்காது.
4/10. உறங்குவதற்குச் சற்று முன் இதமான குளிர்ந்த நீரில் குளிப்பது உடல் வெப்பநிலையைக் குறைத்து, தூக்கத்தை விரைவாகத் தூண்டும்.
5/10. மொபைல், லேப்டாப் போன்ற சாதனங்கள் வெப்பத்தை வெளியிடும். உறங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே அவற்றை அணைத்துவிடுவது அறையின் வெப்பத்தைக் குறைக்க உதவும்.
6/10. நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள். ஆனால் இரவு உறங்குவதற்கு முன் மிக அதிகமாகத் தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்கவும், இல்லையெனில் தூக்கம் தடைபடலாம்.
7/10. கோடையில் எளிதில் செரிக்கக்கூடிய லேசான உணவுகளை உட்கொள்ளுங்கள். காரமான மற்றும் எண்ணெய் உணவுகள் உடல் வெப்பத்தை அதிகரிக்கும்.
8/10. மின்விசிறிக்கு நேர் கீழே ஒரு பாத்திரத்தில் ஐஸ் கட்டிகளை வைத்தால், அது அறையெங்கும் குளிர்ந்த காற்றைப் பரப்ப உதவும்.
9/10. உறங்குவதற்கு முன் பாதங்களை குளிர்ந்த நீரால் கழுவுவது அல்லது ஈரமான துணியால் துடைப்பது உடல் சூட்டைத் தணிக்க சிறந்த வழியாகும்.
10/10. தேவையற்ற மின்விளக்குகள் வெப்பத்தை உருவாக்கும். அறையை இருட்டாக வைத்திருப்பது மனதிற்கும் உடலிற்கும் குளிர்ச்சியான உணவைத் தரும்.