நான்சி மலர்
10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன. இந்த முக்கியமான தருணத்தில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பின்பற்ற வேண்டிய 10 முக்கிய ஆலோசனைகள்.
1/10. 10ஆம் வகுப்பு மதிப்பெண்கள் உங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் ஒரே காரணி அல்ல. இது நீங்கள் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கான ஒரு நுழைவாயில் மட்டுமே.
2/10. உங்களது மதிப்பெண்களை உங்கள் நண்பர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் அல்லது உறவினர்களின் பிள்ளைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். ஒப்பீடு தேவையற்ற மன அழுத்தத்தையே உருவாக்கும்.
3/10. ஒருவேளை நீங்கள் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை என்றாலோ அல்லது தேர்ச்சி பெறவில்லை என்றாலோ மனமுடைந்து விடாதீர்கள். அரசு உடனடியாக துணைத் தேர்வுகளை (Supplementary Exams) நடத்துகிறது.
4/10. நீங்கள் எழுதிய தேர்விற்கு, எதிர்பார்த்ததை விடக் மிகக் குறைவான மதிப்பெண் வந்துள்ளதாக உறுதியாக நம்பினால், விடைத்தாள் நகல் கோரி மறுமதிப்பீடு அல்லது மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.
5/10. 11ஆம் வகுப்பில் சேரும்போது, பெற்றோரின் கட்டாயத்திற்காகவோ அல்லது நண்பர்கள் சேர்கிறார்கள் என்பதற்காகவோ ஒரு பிரிவைத் தேர்ந்தெடுக்காதீர்கள். உங்களுக்கு எதில் ஆர்வம் உள்ளதோ, அதைத் தேர்ந்தெடுங்கள்.
6/10. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மதிப்பெண்களைக் குறைத்து மதிப்பிடாமல், அவர்களுக்குத் தைரியம் கூற வேண்டும். அவர்கள் எடுத்த மதிப்பெண்களுக்கு ஏற்ற சிறந்த அடுத்தகட்ட வழிகாட்டுதலை வழங்க வேண்டும்.
7/10. இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்படும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் (Provisional Marksheet) மற்றும் அதன் டிஜிட்டல் பிரதிகளை பத்திரமாகச் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.
8/10. விரைவாக வேலைக்குச் செல்ல விரும்பும் மாணவர்கள் Polytechnic (Diploma) அல்லது ITI போன்ற தொழிற்கல்விப் படிப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
9/10. தேர்வு முடிவுகள் மற்றும் சேர்க்கை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்குத் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான tnresults.nic.in மற்றும் dge.tn.gov.in ஆகியவற்றை மட்டுமே நம்புங்கள்.
10/10. தேர்வு முடிவுகளால் ஏற்படும் மன அழுத்தம், பதற்றம் இருந்தால், தமிழக அரசு வழங்கும் பிரத்யேக மாணவர் மனநல ஆலோசனை எண்களைத் தொடர்புகொண்டு இலவச வழிகாட்டுதலைப் பெறலாம்.