நான்சி மலர்
வனவிலங்கு சரணாலயங்களுக்குச் (Wild Life Sanctuary) செல்லும்போது பாதுகாப்பாக இருக்கவும், இயற்கையை மதிக்கவும் பின்பற்ற வேண்டிய 10 முக்கிய விதிகள்..
1/10. சரணாலயத்திற்குள் எக்காரணத்தைக் கொண்டும் வாகனத்தை விட்டு கீழே இறங்கவோ, கதவு மற்றும் ஜன்னல் வழியே உடற்பாகங்களை வெளியே நீட்டவோ கூடாது.
2/10. காட்டு விலங்குகளுக்கு மனிதர்கள் உண்ணும் உணவுகளைக் கொடுப்பது அவற்றின் ஆரோக்கியத்தைக் கெடுக்கும்.
3/10. சத்தமாகப் பேசுவது, மொபைல் போனில் பாடல்களைப் போடுவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். சத்தம் விலங்குகளை மிரட்சியடையச் செய்து, உங்களைத் தாக்கத் தூண்டலாம்.
4/10. விலங்குகளை நோக்கி கற்களை எறிவது, கைகளைத் தட்டி சத்தம் எழுப்புவது அல்லது அவற்றின் கவனத்தைத் திசைதிருப்ப முயல்வது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது.
5/10. காடுகளின் நிறத்தோடு ஒத்துப்போகும் பச்சை, பழுப்பு, சாம்பல் நிற ஆடைகளை அணிய வேண்டும். பிரகாசமான நிறங்கள் (சிவப்பு, மஞ்சள்) விலங்குகளின் கவனத்தை ஈர்த்து, அவற்றை ஆக்ரோஷமடையச் செய்யலாம்.
6/10. விலங்குகளைப் படம் பிடிக்கும்போது மொபைல் அல்லது கேமராவின் 'Flash' லைட்டை கண்டிப்பாக அணைக்க வேண்டும். திடீர் வெளிச்சம் விலங்குகளைக் கோபமடையச் செய்யும்.
7/10. பிளாஸ்டிக் பாட்டில்கள், கவர் போன்ற குப்பைகளைச் சரணாலயத்திற்குள் வீசக் கூடாது. விலங்குகள் இவற்றை உணவென நினைத்து உட்கொண்டால் அவை உயிரிழக்க நேரிடும்.
8/10. சரணாலயத்தில் வாகனங்கள் செல்வதற்கென வகுக்கப்பட்ட பாதைகளை விட்டுத் தனியாகவோ அல்லது அடர்ந்த காட்டுப் பகுதிக்கோ செல்லக் கூடாது.
9/10. சிகரெட் பிடிப்பது, தீப்பெட்டி அல்லது லைட்டர் பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ஒரு சிறிய தவறு கூட ஒட்டுமொத்தக் காட்டையும் அழிக்கும் காட்டுத்தீயாக மாறக்கூடும்.
10/10. வனத்துறையினர் மற்றும் உங்களுடன் வரும் அங்கீகரிக்கப்பட்ட வழிகாட்டிகளின் அறிவுரைகளை அப்படியே பின்பற்ற வேண்டும்.