கல்கி டெஸ்க்
கறிவேப்பிலை, கரிசலாங்கண்ணி, கீழா நெல்லி ஆகியவற்றைச் சாறெடுத்துத் தலையில் தடவி வந்தால் இளநரை நீங்கும்.
கறிவேப்பிலையுடன் 1 தேக்கரண்டி சீரகத்தையும் சேர்த்து மை போல அரைத்து, வாயில் போட்டுத் தண்ணீர் குடித்து விட்டால் வயிற்றுப் போக்கு நீங்கும்.
உடல் எடை குறைய, தினமும் காலையில் எழுந்தவுடன், வெறும் வயிற்றில் பத்து கறிவேப்பிலை இலைகளை வாயில் போட்டு மென்று விழுங்கலாம்.
ஒரு கையளவு கறிவேப்பிலையை எடுத்து நீரில் அலசி, பின்னர் மென்மையாக அரைத்து ஒரு தம்ளர் நீரில் கலந்து தேன், நெல்லிச்சாறு சேர்த்துக் குடிக்க உடல் பருமன் குறைந்துவிடும்.
உணவில் அதிகமாக கறிவேப்பிலைச் சேர்த்துக் கொள்ள, தலைமுடி நரைப்பது கட்டுப்படும். தலைமுடி நன்றாக வளரும்.
கறிவேப்பிலையை அரைத்து மோரில் கரைத்து, உப்பு சேர்த்துவிட்டால் கோடை தாகம் அகற்றும் சுவையான பானம் தயார்.
வெறும் வயிற்றில் காலையில் கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால் வயிற்றில் உள்ள அதிகப்படியான கொழுப்பு கரைந்து செரிமானப் பிரச்னைகள் நீங்கி விடும்.
ரத்தசோகை நோய் உள்ளவர்கள் பேரீச்சம்பழத்துடன் கறிவேப்பிலையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்த சிவப்பணுக்கள் அதிகரித்து ரத்தசோகை நோய் நீங்கும்.
ஒரு தேக்கரண்டி கறிவேப்பிலைப் பொடியை தேனில் கலந்து தினமும் இரு வேளை சாப்பிட்டு வர, உடலில் தேங்கியிருக்கும் சளி வெளியேறும்.
நீரிழிவு நோயாளிகள் கறிவேப்பிலையை வாயில் போட்டு மென்று அதன் சாற்றை விழுங்கினால் நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும்.
சிறிதளவு கறிவேப்பிலையை அரைத்து மோரில் கலந்து குடித்தால் வயிற்று உப்புசம், குமட்டல், வாந்தி மறையும்.
கறிவேப்பிலைச் சாறுடன் ஏலப்பொடி கலந்து பருகி வந்தால், சிறுநீரகப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும்.
தினமும் உணவுடன் கறிவேப்பிலை சேர்த்துச் சாப்பிட்டால் கண் பார்வை தெளிவடையும் .
செரிமானப் பிரச்னைக்கு கறி வேப்பிலை, கொத்து மல்லி புதினா சேர்த்து அரைத்து சாறெடுத்துப் பருகி வந்தால் போதும்.