கே.எஸ்.கிருஷ்ணவேனி
காதலர்கள் தினம் இன்னும் இரண்டு நாட்களில் களைகட்ட காத்திருக்கிறது. காதலர்கள் என்ன கிப்ட் கொடுப்பது என்று தலையை பிய்த்துக் கொண்டு யோசித்து இருப்பார்கள். காதலர் தின பரிசு யோசனைகள் சில.
மேஜிக் கப் (Magic mug): மேஜிக் கப்பில் சூடான பானம் நிரப்பப்படும் பொழுது நாம் விரும்பும் நபர்களுக்காக பிரத்தியேகமாக ஒரு தனிப்பயனாக்கப்பட்ட செய்தி அல்லது புகைப்படம் வெளிப்படும். இது காதலர்கள் தினத்தன்று பரிசளிக்க ஏற்ற பொருளாகும்.
புகைப்பட பாப்-அப் பெட்டி (Photo pop up box): சிறப்பு செய்தியுடன் கூடிய ஆல்பம் சிறந்த நினைவுகளைப் பெறவும், உயிர்பிக்கவும் ஏற்ற சிறந்த பரிசுப் பொருளாகும். காலத்தால் அழியாத புகைப்படங்களும், செய்திகளும் கூடிய இதனை காதலர் தின பரிசாக கொடுக்க மகிழ்வார்கள்.
கிளட்ச் பை (Glitch Bag): ஒரு அழகான கிளட்ச் பை மிகவும் பொருத்தமான பரிசாக இருக்கும். அத்துடன் அன்பின் பரிசாக சிகப்பு ரோஜாக்கள் கொடுத்து மகிழ்விக்கலாம்.
3D மினியேச்சர் ஜோடி (3D Miniature couple): தனிப்பயனாக்கப்பட்ட 3D மினியேச்சர் ஜோடி உங்கள் காதலரை ஆச்சரியப்படுத்தும் இனிமையான பரிசு பொருளாகும். அத்துடன் அந்தப் பரிசுப் பொருள் அவரை மிகவும் சிறப்பு வாய்ந்தவராக உணரச் செய்யும்.
தனிப்பயனாக்கப்பட்ட வட்ட வடிவ புகைப்பட இரவு விளக்கு (Round Photo night lamp): அழகான உங்கள் புகைப்படத்துடன் கூடிய அற்புதமான இரவு விளக்கு உங்கள் படுக்கை அறைக்கு கூடுதல் சிறப்பைத் தரும். இதை உங்கள் அழகிய இனிமையான நினைவுகளை மீட்டெடுக்கும்.
வேலைப்பாடுகள் மிகுந்த நகைப்பெட்டி (Jewelry box): நகைகளை பாதுகாக்கும் அழகான வேலைப்பாடுகள் மிகுந்த நகைப்பெட்டி சிறந்த பரிசு பொருளாகும். இதனை பரிசாக பெரும் காதலர் நிச்சயம் மகிழ்ச்சியில் திளைப்பார்கள்.
ஆண்களுக்கான சிறப்பு பரிசு: அழகான டை மற்றும் கஃப்லிங்க்ஸ், தோல் பணப்பை மற்றும் பெல்ட் உள்ள சிறந்த தொகுப்பான இதனை பரிசாக பெரும் ஆண்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள்.
சாக்லேட் புகைப்பட கேக் (Chocolate photo cake): ஒரு சுவையான சாக்லேட் கேக். அதில் உங்கள் இருவரின் அழகான புகைப்படம் மற்றும் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட அந்த கேக்கின் சுவை உங்களை திருப்தி படுத்துவதுடன் உங்கள் இதயத்தையும் உருக்கும் வண்ணம் இருக்கும்.
ஐ லவ் யூ ஷேடோ பாக்ஸ் (I love You shadow Box): இனிமையான செய்தியுடன் கூடிய நிழல் பெட்டியை வாங்கி வந்து உங்கள் அறையில் வைத்து அதன் அழகைக் காண LEDஐ இயக்கவும். காதலர்களுக்கு ஏற்ற சிறந்த காதலர் தின பரிசாகும்.