கேள்விகள் நம்முடையவை. பதில்கள் பல்வேறு அறிஞர்களுடையவை!

ச. நாகராஜன்

1. எந்த உரையாடல்- பேச்சு -மோசமானது?

உரையாடலில் மோசமானது விவாதம் தான்! – ஜோனாதன் ஸ்விப்ட்

2. எவனுடன் போட்டி போடக் கூடாது?

எவனிடம் இழப்பதற்கு ஒன்றுமே இல்லையோ அவனிடம் போட்டி போடக் கூடாது. – பல்டாசர் க்ரேசியன்

3. உறுதி என்பது என்ன?

ஏழு தடவை விழுந்தாலும் எட்டாவது முறை எழுந்து நிற்பது! - ஜப்பானியப் பழமொழி

4. வணிகத்தில் வெற்றி பெறுவது எப்படி?

வணிகத்தில் வெற்றி பெற - தைரியமாக இரு, முதலாவதாக இரு, வித்தியாசமாக இரு. – யாரோ

5. பொறுமையாக இருப்பவனுக்கு என்ன பயன்?

மிகவும் பொறுமையாக இருப்பவன் எல்லாவற்றிலும் நிபுணன் ஆவான்! – ஜார்ஜ் சவில்

6. அதிக அதிகாரம் உள்ளவன் அதை என்ன செய்ய வேண்டும்?

அதிக அதிகாரம் உள்ளவன் அதை குறைவாகப் பயன்படுத்த வேண்டும்! – செனேகா

7. எப்போது ஒரு கடையை திறக்கக் கூடாது?

புன்சிரிப்புடன் பழகத் தெரியாவிடில் ஒரு கடையைத் திறக்காதே! – யூதப் பழமொழி

8. நன்மதிப்பை யார் இழக்க மாட்டார்கள்?

வெற்றி பெற்ற ஒருவன் ஒருபோதும் நன்மதிப்பை இழக்கமாட்டான். – தாமஸ் ஆல்பர்ட் கார்ல் ஃபுல்லர்

9. உயர்ந்த நிலையைப் பெறுவது எப்படி?

உயர்ந்த நிலையைப் பெறுவதற்கான விலை – பொறுப்புடன் இருப்பது! – வின்ஸ்டன் சர்ச்சில்

10. மேலே உயர்வதற்கான வழி என்ன?

பணிவதும் அனைவரையும் தயவுடன் அணுகுவதுமே மேலே உயர்வதற்கான வழி. – பென் ஜான்ஸன்

11. தந்திரம் என்பது என்ன?

ஒரு கருத்தை எதிரிகள் யாரையும் உருவாக்காமல் எடுத்துரைப்பது தான் தந்திரம்! – ஹோவர்ட் டபிள்யூ. நியூடன்

12. நல்ல நடையுடன் எழுதுவது எப்படி?

ஒருவன் நல்ல நடையுடன் எழுத விரும்பினால் அவன் தனது சிந்தனையில் தெளிவுடன் இருக்க வேண்டும். – ஜோஹன் டபிள்யூ வான் கதே

13. அதிஜாக்கிரதையாக ஒருவன் இருந்தால் என்ன நடக்கும்?

அதிஜாக்கிரதையாக செயல்படும் ஒருவன் குறைவாகவே சாதிப்பான்! – ஜோஹன் ஷில்லர்

14. மனித இயற்கையில் ஒருவன் மிகவும் அதிகமாக விரும்புவது எதை?

மனித இயற்கையில் ஒருவன் தன்னை மற்றவர்க்ள் பாராட்டுவதையே அதிகமாக விரும்புகிறான். – வில்லியம் ஜேம்ஸ்

Aadhi shankarar Quotes: ஆதி சங்கரரின் 12 பொன்மொழிகள்!