கெமிக்கல் இல்லாத நல்ல மாம்பழத்தை வாங்குவது எப்படி? ரகசியங்கள் இதோ!

கிரி கணபதி

கோடைக்காலம் வந்தாலே பழங்களின் ராஜாவான மாம்பழங்களின் சீசனும் களைகட்டிவிடும். ஆனால், ரசாயனம் கலக்காத நல்ல தித்திப்பான மாம்பழங்களை எப்படிக் கண்டுபிடித்து வாங்குவது என்பது பலருக்கும் தெரிவதில்லை.

Mango

1. மாம்பழத்தின் காம்புப் பகுதியில் நுகர்ந்து பார்த்தால் நல்ல இனிமையான வாசனை வர வேண்டும். வாசனையே இல்லை என்றால் அது இயற்கையாகப் பழுக்கவில்லை என்று அர்த்தம்.

Mango

2. பழத்தை லேசாக அழுத்திப் பார்த்தால் சற்றே மென்மையாக இருக்க வேண்டும். ரொம்பவும் கல்லுப் போலவோ அல்லது அதிக சதசதப்பாகவோ இருக்கக் கூடாது.

Mango

3. மாம்பழத்தின் நிறத்தை வைத்து மட்டும் அதன் சுவையை எடைபோடக் கூடாது. சில பழங்கள் வெளியே பச்சையாக இருந்தாலும் உள்ளே நன்கு பழுத்து தித்திப்பாக இருக்கும்.

Mango

4. கார்பைடு கல் வைத்துப் பழுக்க வைத்த பழங்கள் பார்ப்பதற்கு ஒரே மாதிரி மஞ்சள் நிறத்தில் பளபளப்பாக இருக்கும். ஆனால் அவை உள்ளே சரியாகப் பழுக்காமல் கடும் புளிப்புச் சுவையுடன் இருக்கும்.

Mango

5. பழத்தின் தோலில் லேசான சுருக்கங்கள் இருந்தால் அது இயற்கையாகப் பழுத்தது என்பதை உறுதி செய்யலாம். ஆனால் ரொம்பவும் சுருங்கிப் போயிருந்தால் அது அழுகத் தொடங்கும் பழைய பழமாக இருக்கலாம்.

Mango

6. மாம்பழத்தின் காம்புப் பகுதியில் லேசான பிசின் கசிந்து காய்ந்து போயிருக்கிறதா எனப் பாருங்கள். இப்படி இருந்தால் அது மரத்திலேயே இயற்கையாக முற்றிப் பழுத்த பழம் ஆகும்.

Mango

7. நல்ல சதைப்பற்றுள்ள மாம்பழங்கள் கையில் தூக்கிப் பார்க்கும்போது சற்று கனமாக இருக்கும். இப்படி எடையுடன் இருக்கும் பழங்களில்தான் அதிக ஜூஸ் மற்றும் சுவை இருக்கும்.

Mango

8. மாம்பழம் வாங்கும்போது தட்டையாக இல்லாமல் நல்ல உருண்டையான வடிவத்தில் இருக்கும்படி பார்த்து வாங்குங்கள். அதுதான் நன்கு முற்றிய மற்றும் சதைப்பற்றுள்ள பழமாக இருக்கும்.

Mango

9. பழத்தில் ஆங்காங்கே சிறிய கரும்புள்ளிகள் இருப்பது முற்றிலும் இயற்கையான ஒன்றுதான். ஆனால் பெரிய அளவிலான கருப்புத் தழும்புகள் இருந்தால் பழம் வீணாகத் தொடங்கியுள்ளது எனலாம்.

Mango

10. கோடையில் எந்த மாதத்தில் எந்த ரக மாம்பழம் சீசனில் வருகிறதோ அதை மட்டும் பார்த்து வாங்குங்கள். உள்ளூர் வியாபாரிகளிடம் நேரடியாக வாங்குவது சுவையையும் ஆரோக்கியத்தையும் உறுதி செய்யும்.

Mango

மேலே உள்ள சின்னச் சின்ன விஷயங்களைக் கவனித்தாலே போதும். இந்த கோடைக்காலத்தில் நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் சுவையான மாம்பழங்களை எந்த பயமும் இன்றி ஏமாறாமல் வாங்கி ருசியுங்கள்!

Mango
Ambedkar
அறிவால் உலகை வெல்வது எப்படி? சட்ட மேதை அம்பேத்கரின் வைர வரிகள்!