எஸ்.மாரிமுத்து
1/12. அறிவைத் தேடி ஓடுங்கள், நாளைய வரலாறு உங்கள் நிழலாக ஓடி வரும்!
2/12. மனிதனுக்கு மனிதன் சரியான உறவுகள் கொள்வதைத் தடுக்கின்ற எந்த ஒரு மதமும் மதமே அல்ல. அது அடக்கு முறையின் அடையாளமே..
3/12. வெற்றியோ, தோல்வியோ எது வந்தாலும் கடமையை செய்வோம். யார் பாராட்டினாலும், பாராட்டா விட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும், நேர்மையும் வெளியாகும் போது அது வெற்றி வரும்!
4/12. தவிர்க்க முடியாதது, தீர்க்க முடியாதது என்று எண்ணுவது மடமை ஆகும்!
5/12. ஒன்றும் செய்யாமல் கருவேல மரம் போல் வாழ்வதை விட, ஒரு பெரிய காரணத்திற்காக இளமையில் இறப்பது சிறந்தது!
6/12. கடவுளுக்கு தரும் காணிக்கை விட ஒரு ஏழைக்கு தரும் கல்வி மேலானது!
7/12. தன்னை உயர்ந்தவனாகவும், மற்றவரை தாழ்ந்தவனாகவும் நினைப்பவன் ஒரு மன நோயாளி!
8/12. நீ என்னை உன் அடிமை என்று நினைக்கும் போது உன்னை அழிக்கும் ஆயுதமாக நான் மாறி விடுவது என் கடமை!
9/12. தனக்கு அநீதி இழைக்கப்பட்டதை உணரக்கூட முடியாதவன் மனிதனே அல்ல!
10/12. ஒரு லட்சியத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதை அடைவதற்காக விடாமுயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்!
11/12. சுயமரியாதை அழித்து எந்த இனத்தையும் வளர்க்க முடியாது!
12/12. வாழ்க்கை நீண்டதாய் இருப்பதை விட, பெருமை மிக்கதாய் இருக்க வேண்டும்!