கிரி கணபதி
சில பொருட்கள் நம் வீட்டில் இருந்தால், அவை அதிர்ஷ்டத்தையும், செல்வத்தையும் கூட ஈர்க்கும் தெரியுமா? வாங்க, அந்த வசிய பொருட்கள் என்னென்ன, அவற்றை வீட்டில் எப்படி வைக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
பிளாஸ்டிக் அல்லது சில்வர் பாத்திரத்தில் கல் உப்பை வைக்கக் கூடாது. அது உடலுக்கும் நல்லது இல்லை, சக்திக்கும் நல்லது இல்லை. மண்பானை அல்லது பீங்கான் ஜாடிக்கு மாறி பாருங்க, வீடே பாசிடிவ் எனர்ஜியால் நிறைஞ்சிடும்
கல் உப்பை பீங்கான் அல்லது மண்பானை ஜாடியில் போட்டு வைத்தால், வீட்டில் நல்ல சக்திகள் பெருகும்.
அரிசி பாத்திரம் எப்போதுமே நிறைஞ்சு இருக்கணும். முக்கால் பாத்திரத்துக்கு குறைவதற்கு முன்னாடியே அரிசியை நிரப்பிடுங்க. இது வீட்டில் அன்னபூரணி கடாக்ஷத்தை எப்பொழுதும் இருக்க செய்யும்.
வலம்புரி சங்கு பூஜை அறையில் இருந்தால், அது குடும்பத்துக்கு பல விதமான நன்மைகளை கொடுக்கும். வீட்டில் சந்தோஷம், அமைதி, செல்வம் எல்லாமே பெருகும்.
குங்குமம் வெறும் அலங்காரம் மட்டும் இல்ல. அது மங்களத்தின் அடையாளம். குங்குமச்சிமிழ் எப்பொழுதும் நிறைஞ்சு இருக்கணும். குங்குமம் குறைஞ்சு போனால், உடனே நிரப்பிடுங்க.
வீட்டில் எப்பொழுதும் நல்ல தரமான குங்குமம் தாராளமாக இருக்கணும். அது வீட்டில் லக்ஷ்மி கடாக்ஷத்தை நிலைக்க செய்யும்.
ரெடிமேட் மஞ்சள் பொடியை விட்டுட்டு, மஞ்சள் கட்டியை பயன்படுத்துங்க. மஞ்சள் கட்டியும், அதை தேய்க்கிற கல்லையும் குளியலறையில் வைத்தால், வீட்டில் அதிர்ஷ்டம் பெருகும்.
வீட்டில் படங்கள் போடுவதும் அதிர்ஷ்டத்தை ஈர்க்கும். தண்ணீர் ஓடுவது போன்ற படங்கள், கோவில் கோபுரம் படங்கள், மயில், அன்னப்பறவை படங்கள், ஜோடி யானை படங்கள் இதெல்லாம் வீட்டில் ஹாலில் மாட்டுங்க, நல்லதே நடக்கும்.
வீட்டில் அசையும் பொருட்கள் வைப்பது நல்லது. தஞ்சாவூர் பொம்மை, பெல் சவுண்ட் மணி, அசையும் கடிகாரம் மாதிரி ஏதாவது ஒன்னு ஹாலில் வைங்க.
இந்த மாதிரி அசையும் பொருட்கள் வீட்டில் நேர்மறை ஆற்றலை கொடுக்கும். வீடே சந்தோஷமாகவும், பாசிடிவ் எனர்ஜியோடும் இருக்கும்.
படுக்கை அறையில் எப்பொழுதும் லைட் இருக்கணும். பகலில் சூரிய வெளிச்சம், இரவில் நைட் லாம்ப். வெளிச்சம் தொடர்ந்து இருந்துகொண்டே இருந்தால், அஷ்டதிக்கு யோகம் கிடைக்கும்.
இந்த வசிய பொருட்கள் எல்லாமே ரொம்ப ஈஸியா கிடைக்க கூடியவைதான். இவற்றை நம் வீட்டில் வைப்பதன் மூலம், வெறும் அழகை மட்டுமல்ல, செல்வத்தையும், அதிர்ஷ்டத்தையும், சந்தோஷத்தையும் கூட நம்மால் ஈர்க்க முடியும்.