இல்லத்தரசிகள் ஷாக்! சமையலறையில் இத்தனை நாளா இதை தெரியாமலே சமைச்சோமே!

நான்சி மலர்

1/10. தேங்காய் ஓட்டை எளிதாக பிரிக்க, தேங்காய் மூடியை அடுப்பில் குறைந்த தீயில் 2 முதல் 3 நிமிடங்கள் காட்டி சூடுபடுத்துங்கள். அதன் பின் கத்தியால் லேசாக தூக்கினால், தேங்காய் ஓட்டில் இருந்து கழன்று வந்துவிடும்.

kitchen hacks

2/10. தக்காளி சட்னி அரைக்கும் போது, நல்ல தடிமனான ஹோட்டல் பதத்தில் கிடைக்க, சட்னி வதக்கும் போது ஒரு சிறிய துண்டு வெள்ளை பூசணிக்காய் அல்லது ஒரு ஸ்பூன் பொட்டுக்கடலை சேர்த்து வதக்கி அரைத்துப் பாருங்கள். சுவையும் கூடும்,

kitchen hacks

3/10. அதிக அளவு பூண்டை சீக்கிரம் உரிக்க, பூண்டு பற்களை தனித்தனியாக பிரித்து, லேசான வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடங்கள் ஊற வையுங்கள். அதன் பின் தோலை உப்பினால் மிக எளிதாக கழன்றுவிடும்.

kitchen hacks

4/10. வீட்டில் போடும் டீ ஹோட்டல் சுவையுடன் இருக்க நீங்கள் பயன்படுத்தும் 250 கிராம் டீ தூளுடன், 1 டேபிள் ஸ்பூன் இன்ஸ்டண்ட் காபி தூளை சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த கலவையைப் பயன்படுத்தி டீ போடும் போது சுவை அட்டகாசமாக இருக்கும்.

kitchen hacks

5/10. வெண்டைக்காய் சமைக்கும் போது பிசுபிசுப்பு இல்லாமல் உதிரியாக வர, வதக்கும் போது சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்தால், பிசுபிசுப்பு நீங்கி வெண்டைக்காயின் நிறமும் மாறாமல் இருக்கும்.

kitchen hacks

6/10. குழம்பில் புளிப்புத்தன்மை கூடிவிட்டால், ஒரு சிறிய துண்டு வெல்லம் அல்லது ஒரு டீஸ்பூன் நாட்டுச் சர்க்கரை சேர்த்து கொதிக்கவிட்டால் புளிப்பு சமநிலைக்கு வரும்.

kitchen hacks

7/10. குழம்பு அல்லது சாம்பாரில் உப்பு கூடிவிட்டால், சிறிய உருளைக்கிழங்கு துண்டுகளை உள்ளே போட்டு 5 நிமிடம் கொதிக்கவிட்டு பின் எடுத்துவிடலாம்; இது அதிகப்படியான உப்பை உறிஞ்சிவிடும்.

kitchen hacks

8/10. மிக்ஸி ஜார் பிளேடுகள் கூர்மை இழந்துவிட்டால், ஜாரில் அரை கப் கல் உப்பு சேர்த்து 1-2 நிமிடங்கள் நன்றாக ஓட விடுங்கள். கல் உப்பின் உராய்வு காரணமாக பிளேடுகள் உடனடியாக கூர்மையாகிவிடும்.

kitchen hacks

9/10. சப்பாத்தி மாவு பிசையும் போது வெதுவெதுப்பான பால் சேர்த்து பிசையுங்கள். மாவை பிசைந்த பின், அதன் மேல் சில துளிகள் எண்ணெய் தடவி 20 நிமிடங்கள் மூடி வைக்கவும். இந்த முறையில் செய்தால் சப்பாத்தி நீண்ட நேரத்திற்கு மென்மையுடன் இருக்கும்.

kitchen hacks

10/10. எலுமிச்சம்பழத்தில் சாறு முழுமையாக பிழிய வரவில்லையா? அதை நறுக்குவதற்கு முன், 10 வினாடிகள் வெதுவெதுப்பான நீரில் 2 நிமிடங்கள் போட்டு எடுங்கள். சாறு மிக எளிதாகவும், அதிகமாகவும் பிழிய வரும்!

kitchen hacks
Buttermilk | நீர் மோர் | AI image
ஸ்போர்ட்ஸ் டிரிங்க்ஸை வீழ்த்திய பாட்டி காலத்து நீர் மோர்!