நான்சி மலர்
நீல நிறம் அமைதியான ஆற்றல், மனத் தெளிவைக் குறிக்கிறது. நீலப் படிகத் தாமரையை படுக்கையறையில் தென்மேற்கு பகுதியில் வைப்பதின் மூலமாக திருமண வாழ்வில் அமைதியை கொண்டுவர முடியும். மேலும் இது செல்வம் மற்றும் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும்.
Dream catcher ஐ படுக்கையறையில் மாட்டி வைப்பதால், தூங்கும் போது வரும் கெட்ட கனவுகளை போக்கி நல்ல கனவுகளை அனுமதிக்கும். இன்று, ட்ரீம் கேட்சர்கள் வீடுகளில் நேர்மறை ஆற்றலை ஈர்க்கப் பயன்படுத்தப்படுகின்றன.
காற்று மணியின் இனிமையான, மென்மையான ஒலி நேர்மறை ஆற்றலை வீட்டிற்குள் ஈர்க்கிறது. உலோகம் அல்லது மூங்கிலால் செய்யப்பட்ட விண்ட் சைம்ஸ்கள், செல்வத்தை ஈர்க்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன.
சிரிக்கும் புத்தர் மகிழ்ச்சி, நல்ல அதிர்ஷ்டத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறார். குபேரனுடன் ஒப்பிடப்படுவதால், சிரிக்கும் புத்தர் சிலை பணத்தையும், செழிப்பையும் வீட்டிற்குள் ஈர்க்கும் என்று நம்பப்படுகிறது.
மூன்று கால் தவளை, வாய் நிறைய நாணயங்களையும், முதுகில் 'பாக்தா' குறியீட்டையும் சுமந்து செல்வது போலச் சித்தரிக்கப்படும் சின்னமாகும். இது செல்வத்தையும், பணத்தையும் வீட்டிற்குள் கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது.
ஃபெங் சுய் ஆமை எதிர்மறை சக்திகளை நீக்கி, நேர்மறை ஆற்றலை (Chi) அதிகரிக்க உதவுகிறது. ஆமை நீண்ட காலம் வாழும் விலங்கு என்பதால், இது நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்தைக் குறிக்கிறது.
அதிர்ஷ்ட மூங்கில் என்பது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பிரபலமாக வளர்க்கப்படும் ஒரு அலங்காரச் செடியாகும். இது குறைந்த அளவில் காற்றைச் சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. இது செழிப்பைக் கொண்டுவரும் ஒரு அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.
ஃபெங் சுய் நீரூற்று என்பது பணத்தின் சக்தி வாய்ந்த சின்னமாக கருதப்படுகிறது. நீரூற்று, வீட்டில் ஓடும் நீரின் ஓசையையும், அசைவையும் கொண்டு வருவதால், அது செல்வத்தின் ஓட்டத்தை தூண்டுவதாக நம்பப்படுகிறது.
சிட்ரின் கிரிஸ்டல், ஃபெங் சுய் மற்றும் கிரிஸ்டல் குணப்படுத்துதல் ஆகிய இரண்டிலும் இது ஒரு முக்கியமான கல்லாகக் கருதப்படுகிறது. இது பொதுவாக 'வியாபாரியின் கல்' அல்லது 'பணத்தின் கல்' என்று அழைக்கப்படுகிறது.
ஃபெங் சுய் நாணயங்கள் பார்ப்பதற்குப் பழங்கால சீனப் பணத்தைப் போலவே இருக்கும். பொதுவாக 3 அல்லது 6 நாணயங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நாணயங்களை சரியான இடத்தில் வைப்பது மிகவும் முக்கியம்.