நான்சி மலர்
உருளைக்கிழங்கை பிரிட்ஜில் வைக்கும் போது அதில் உள்ள ஸ்டார்ச் சுகராக மாறிவிடும். இதை எடுத்து அதிக வெப்பத்தில் சமைக்கும் போது அது கேன்சரை உண்டாக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
வெள்ளேரிக்காயை 10 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சேமித்து வைக்க வேண்டும். இதை குறைவான வெப்பநிலையில் வைக்கும் போது கெட்டுப் போகும்.
பிரட்டை பிரிட்ஜில் வைக்கும் போது அதில் உள்ள ஸ்டார்ச் recrystallize ஆகி ஈரப்பதத்தை இழக்கும். இதனால் இது கெட்டியாகி சுவை குறைந்துவிடும்.
தக்காளியை 12 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு குறைவாக வைக்கும் போது அதன் சுவை மங்கிப் போய்விடும். அதில் உள்ள Juiciness போய்விடும்.
வெங்காயம் ஈரப்பதத்தை உறியும் தன்மையைக் கொண்டது. இதை பிரிட்ஜில் வைக்கும் போது அது பிரிட்ஜில் உள்ள ஈராப்பதத்தை உறிஞ்சி சீக்கிரம் கெட்டுவிடும்.
ஊறுகாயை நாம் உப்பு போட்டு தயாரிப்பதே அது சீக்கிரம் கெட்டு போய்விடக்கூடாது என்பதற்காக தான். எனவே, அதை பிரிட்ஜில் வைக்க வேண்டிய அவசியமில்லை.
வாசனையுள்ள பொருட்களை பிரிட்ஜில் வைக்கக்கூடாது. உதாரணத்திற்கு காபித்தூளை பிரிட்ஜில் வைத்தால் அங்குள்ள மற்ற உணவுகளிலும் காபித்தூள் வாசனை அடிக்கும்.
இயற்கையாகவே நீண்டக்காலம் கெட்டுப் போகாமல் இருக்கக்கூடியதில் தேனும் ஒன்றாகும். அதை பிரிட்ஜில் வைத்தால், தேன் கெட்டியாகி ருசி மாறிவிடும்.
ஜாம்மில் உள்ள சர்க்கரையே Natural preservation ஆக செயல்பட்டு அதை கெடாமல் பாதுகாக்கும். எனவே, இதையுமே பிரிட்ஜில் வைக்க தேவையில்லை.
பூண்டை பிரிட்ஜில் வைக்கும் போது அதனுடைய கெட்டித்தன்மை போய் ரப்பர் போல ஆகிவிடும். எனவே, பூண்டை பிரிட்ஜில் வைக்கக்கூடாது.