நான்சி மலர்
தீபாவளி என்றாலே ஒளி நிறைந்த பண்டிகை என்று பொருள். எனவே, களிமண்ணால் ஆன அகல் விளக்குகளை வண்ணமயமாக அலங்கரித்து வீட்டில் வரிசையாக ஏற்றி வைக்கலாம்.
தீபாவளிக்கு வாசலை அலங்கரிக்க வண்ணமயமான ரங்கோலி கோலங்களை போடலாம். வண்ணப்பொடிகள் அல்லது பூவிதழ்களின் மூலம் இதை செய்யலாம். வீட்டின் வாசலை ரங்கோலியால் அலங்கரித்து நல்வாழ்வையும், மகிழ்ச்சியையும் வரவேற்கலாம்.
LED lightsஐ வீட்டின் ஜன்னல்கள், கதவுகள் போன்ற இடங்களில் தொங்க விடலாம். இது வீட்டிற்கு பண்டிகை கால உணர்வைத் தரும்.
வீட்டை அழகாக காட்டுவதற்கு மலர் அலங்காரம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கு ரோஜா மற்றும் சாமந்தி பூவை பயன்படுத்தலாம். பூக்களில் மாலை செய்து வாசல், பால்கனி, மற்றும் பூஜையறையை அலங்கரிக்கலாம்.
தீபாவளிக்கு பூஜையை அறையை அலங்கரிப்பது மிக முக்கியமாகும். மாவிலை தோரணம், மணிகளால் செய்யப்பட்ட தோரணம், கதவு தொங்கல்களை பயன்படுத்துவது நல்ல உணர்வை தரும்.
கதவுகளை அலங்கரிக்க கண்ணாடி, மணிகள், துணிகளை பயன்படுத்தி நவீன தொங்கல்களை பயன்படுத்துவது நுழைவாயிலை மேலும் அழகாக காட்டும்.
தாமரை உருளிகளில் தண்ணீரை நிரப்பி மலர்கள் மற்றும் மிதக்கும் மெழுகுவர்த்தியை ஏற்றி வீட்டின் வாசல் அருகில் வைப்பது ஒரு நல்ல வரவேற்பாக அமையும்.
சோபா மற்றும் நாற்காலிகளுக்கு தீபாவளிக்கு ஏற்றவறு வண்ணமையமான நிறங்களில் குஷன் மாற்றுவது வீட்டின் தோற்றத்தை உடனயடியாக மாற்றியமைக்கும்.
வீடு முழுவதும் வாசனை பரப்பக்கூடிய மெழுகுவர்த்தி மற்றும் வண்ணமயமான தண்ணீரில் மிதக்கக்கூடிய மெழுகுவர்த்திகளை வைத்து வீட்டை நேர்த்தியாக அலங்காரம் செய்யலாம்.
டிரீம் கேச்சரை வீட்டில் மாட்டுவது மேலும் வீட்டிற்கு அழகை சேர்க்கும். இந்த தனித்துவமான வண்ண இறகுகளால் ஆன டிரீம் கேச்சர் கண்களை கவர்வதாக இருக்கும். இது நெகட்டிவ் எனர்ஜியை தடுத்து வீட்டிற்குள் பாசிட்டின் எனர்ஜி மட்டும் வருவதற்கு வழிவகுக்கிறது.