உங்கள் பெண் குழந்தை பாதுகாப்பாக இருக்கிறாளா? இந்த 10 விதிகள் தெரிந்திருக்க வேண்டும்!

நான்சி மலர்

பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, அவர்களுக்கு நாம் சொல்லித் தர வேண்டிய 10 மிக முக்கியமான பாதுகாப்பு குறிப்புகள்.

Girl child safety tips

1/10. குழந்தைகளுக்கு உடலின் எந்தெந்த பகுதிகள் தனிப்பட்டவை (Private parts) என்பதை மிகத் தெளிவாகக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

Girl child safety tips

2/10. யாராவது அசௌகரியமாகத் தொட்டாலோ அல்லது தவறாக நடத்த முயன்றாலோ, உடனே சத்தமாக 'வேண்டாம் (NO)' என்று சொல்ல வேண்டும் என்று சொல்லித் தாருங்கள்.

Girl child safety tips

3/10. 'இதை அம்மாவிடம் சொல்லாதே, உனக்கு சாக்லேட் தருகிறேன்' என்று யாராவது கூறினால், அதை உடனே பெற்றோரிடம் சொல்ல வேண்டும் என்று அறிவுறுத்துங்கள்.

Girl child safety tips

4/10. தெரியாத நபர்கள் தரும் சாக்லேட், பொம்மைகள் அல்லது திண்பண்டங்களை வாங்கக்கூடாது. அதேபோல, பெற்றோருக்குத் தெரியாமல் முன்பின் தெரியாதவர்களுடன் தனியாக எங்கும் செல்லக்கூடாது என்று சொல்லித் தாருங்கள்.

Girl child safety tips

5/10. குழந்தைகளுக்கான அவசர உதவி எண்ணான 1098 (Childline) மற்றும் போலீஸ் உதவி எண்ணான 100 ஆகியவற்றை அவசர காலத்தில் எப்படிப் பயன்படுத்துவது என்று கற்றுக் கொடுங்கள்.

Girl child safety tips

6/10. குழந்தையின் சம்மதம் இல்லாமல் உறவினர்களோ அல்லது நண்பர்களோ கூட அவர்களைக் கட்டியணைக்கவோ அல்லது முத்தமிடவோ கட்டாயப்படுத்தக் கூடாது.

Girl child safety tips

7/10. தற்போது குழந்தைகள் ஆன்லைனில் அதிக நேரம் செலவிடுவதால், தெரியாத நபர்களுடன் சாட் செய்யக்கூடாது, தங்களின் புகைப்படம், முகவரி, பள்ளி விவரங்கள் போன்ற தனிப்பட்ட தகவல்களை இணையத்தில் பகிரக்கூடாது.

Girl child safety tips

8/10. குழந்தைகள் உங்களிடம் எதைச் சொன்னாலும் நீங்கள் அவர்கள் பக்கம் நிற்பீர்கள் என்ற நம்பிக்கையை அவர்களுக்குக் கொடுங்கள்.

Girl child safety tips

9/10. பெற்றோர்கள் இல்லாத நேரத்தில், அவசர உதவிக்கு அணுகக்கூடிய நம்பகமான நபர்களை ஆசிரியை, தாத்தா, பாட்டி குழந்தைக்கு அடையாளம் காட்டி, அவர்களை 'பாதுகாப்பான வட்டம்' என்று புரிய வைக்க வேண்டும்.

Girl child safety tips

10/10. ஒரு நபரின் அருகில் இருக்கும்போது பயமாகவோ, அசௌகரியமாகவோ தோன்றினால், அந்த இடத்தை விட்டு உடனே நகர்ந்துவிட வேண்டும் என்று சொல்லித் தாருங்கள்.

Girl child safety tips
Deepfake Voice Scam | credit AI image
இந்தியாவில் அதிகரிக்கும் Deepfake Voice Scam!