கிரி கணபதி
வீட்டு பாதுகாப்பு: குழந்தைகள் படிக்கட்டுகளில் விழாமல் இருக்க, படிக்கட்டுகளின் மேல் மற்றும் கீழ்பகுதிகளில் அவர்கள் ஏறாத படிக் கதவுகளை அமைக்கவும்.
வீட்டு பாதுகாப்பு: குழந்தைகளுக்கு பாதகம் ஏற்படுத்தக்கூடிய பொருட்கள், மருந்துகள் மற்றும் பிற அபாயகரமானப் பொருட்களை அவர்களுக்கு எட்டாதவாறு வைக்கவும்.
வீட்டு பாதுகாப்பு: பிளக் ஓட்டைகளில் குழந்தைகள் கை வைக்காதவாறு மூடி வைக்கவும். தீப்பெட்டி, லைட்டர்கள் அல்லது எலக்ட்ரிக் சாக்கெட்டுகளுடன் விளையாட வேண்டாம் என்று குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்.
வீட்டு பாதுகாப்பு: குழந்தைகள் விழுங்கக் கூடிய அளவில் இருக்கும் சிறிய பொருட்களை அவர்கள் அணுகாதவாறு பார்த்துக் கொள்ளவும்.
அவசரகால பாதுகாப்பு: குழந்தைகளுக்கு அவர்களின் முழு பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றைக் கற்றுக்கொடுங்கள்.
அவசரகால பாதுகாப்பு: ஏதேனும் ஆபத்து சமயத்தில் 100 எண்ணை அழைக்க வேண்டும் என்பதை அவர்களுக்குக் கற்பிக்கவும்.
அவசரகால பாதுகாப்பு: சிறிய காயத்தை எப்படி சுத்தம் செய்வது மற்றும் கட்டு போடுவது போன்ற அடிப்படை முதலுதவி நுட்பங்களை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள்.
அவசரகால பாதுகாப்பு: முன்பின் தெரியாத நபர்கள் சொல்வதை தேவையில்லாமல் நம்ப வேண்டாம் என்றும் ‘குட் டச்’, ‘பேட் டச்’ போன்ற பாதுகாப்பு அம்சங்களையும் சொல்லிக்கொடுங்கள்..