இதைச் செஞ்சா போதும்! வீட்டு வேலைகள் இனி ஜாலியாக முடியும்!

நான்சி மலர்

1/10. வீட்டில் எறும்பு புற்று அல்லது எறும்புகள் அதிகம் வரும் இடங்களில் சிறிது பெருங்காயத் தூளைத் தூவி விட்டால், எறும்புத் தொல்லை இருக்காது.

useful household tips

2/10. வெள்ளி ஆபரணங்கள் அல்லது பாத்திரங்களைச் சேமித்து வைக்கும் டப்பாவில் ஒரு துண்டு கற்பூரத்தைப் போட்டு வைத்தால், அவை கருப்பாவதைத் தடுக்கலாம்.

useful household tips

3/10. துணிகளில் எண்ணெய் அல்லது கிரீஸ் கறை படிந்திருந்தால், அந்த இடத்தில் சில சொட்டுக்கள் நீலகிரித் தைலம் (Eucalyptus oil) தடவி ஊறவைத்துத் துவைத்தால் கறை எளிதில் நீங்கிவிடும்.

useful household tips

4/10. சாக்பீஸ்களைப் பொடி செய்து, டியூப்லைட் அல்லது சுவர்களின் மூலைகளில் தடவி வைத்தால் பல்லிகள் வராது.

useful household tips

5/10. பாத்ரூமில் உள்ள துர்நாற்றத்தைத் தவிர்க்க, ஒரு துண்டு பச்சை கற்பூரத்தை சிறிய துளைகளிட்ட பிளாஸ்டிக் கவரில் போட்டுத் தொங்க விடுங்கள். இது பாத்ரூமை எப்போதும் நறுமணமாக வைத்திருக்கும்.

useful household tips

6/10. துருப்பிடித்த பூட்டுகளைத் திறக்க சிரமமாக இருந்தால், எண்ணெய்க்குப் பதிலாகச் சிறிது பவுடரைத் தூவி முயற்சி செய்யுங்கள்; பூட்டு எளிதாகத் திறக்கும்.

useful household tips

7/10. பூண்டு தோலை எளிதாக உரிக்க, பூண்டுப் பற்களில் சிறிது எண்ணெய் தடவி 3 மணி நேரம் வெயிலில் வைத்துவிட்டுப் பிறகு உரித்தால், தோல் தானாகவே வரும்.

useful household tips

8/10. எவர்சில்வர் பாத்திரங்களின் மங்கலைப் போக்க, வாரத்திற்கு ஒருமுறை விபூதி கொண்டு தேய்த்துக் கழுவினால் பாத்திரங்கள் வெள்ளி போல மின்னும்.

useful household tips

9/10. வீட்டில் புதிதாக பெயிண்ட் அடித்திருந்தால், அதன் வாசனை நீங்க ஒரு வெங்காயத்தை நறுக்கி வீட்டின் நடுவே ஒரு தட்டில் வைத்து விடுங்கள். வெங்காயம் பெயிண்ட் வாடையை இழுத்துக்கொள்ளும்.

useful household tips

10/10. பிளாஸ்டிக் பக்கெட்டில் ஓட்டை விழுந்துவிட்டால், பழைய டூத் பிரஷை நெருப்பில் காட்டி உருக்கி, அந்த உருகுதிரவத்தைக் கொண்டு ஓட்டையை அடைக்கலாம்.

useful household tips
Tiles Cleaning Tips
டைல்ஸ் கறை போகலையா? கை வலிக்க தேய்க்காம பளபளக்க வைக்க சூப்பர் ட்ரிக்ஸ்!