ம.வசந்தி
Real dates vs Fake dates:
1. பேரிச்சம்பழங்களில் அசல் போலி என இரு வகைகளுமே சந்தைகளில் தாராளமாக கிடைக்கின்றன.
2. நீங்கள் வாங்கும் பேரிச்சம்பழம் உண்மையானதா அல்லது போலியானதா? வாங்குவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியவை:
3. வெளிர் பழுப்பு மற்றும் அடர் பழுப்பு நிறத்தில் இருந்தால் இயற்கையான நிறத்துடன் பளபளப்பு இல்லாமல் இருந்தால் அவை உண்மையான பேரிச்சம் பழங்கள்.
4. மிகவும் பளபளப்பாகவும், பிசுபிசுப்பாகவும், வழவழப்பாகவும் காணப்பட்டால் அவை போலி பேரிச்சம் பழங்கள் ஆகும்.
5. போலிப் பழங்கள் செயற்கை இனிப்பு சுவையும், சில சமயங்களில் ரசாயன வாசனையையும் கொண்டிருக்கும்.
6. உண்மையான பேரிச்சம் பழத்தில் இயற்கையான இனிப்பு சுவை கொண்டது.
7. உண்மையான பேரிச்சம் பழம் மென்மையாக வாயில் வைத்தால் உருகும் தன்மை கொண்டது.
8. கடினமான பளபளப்பான தோற்றத்துடன் மெல்ல கடினமாக இருந்தால் அவை போலி பேரிச்சம் பழங்கள் ஆகும்.
9. ஒரு டம்ளர் தண்ணீரில் பேரிச்சம்பழத்தைப் போட்டால், செயற்கை நிறங்கள் கரைந்து தண்ணீரில் நிறம் மாறினால் அது போலி.
10. உண்மையான பேரிச்சம் பழம் தண்ணீரின் நிறம் மாறாமல் இருந்தால்.
11. இனி பேரிச்சம் பழங்களை வாங்கும்போது மேற்கூறிய குறிப்புகளை கவனத்தில் கொண்டு உண்மையான பேரிச்சம் பழங்களைப் பார்த்து வாங்க வேண்டும்.
12. பேரிச்சம் பழங்களின் தயாரிப்பு தேதி, காலாவதி ஆகும் தேதி போன்றவற்றையும் கவனித்து வாங்குவது சிறந்தது.