கிரி கணபதி
நீங்கள் வாங்கும் தேன் சுத்தமானதா அல்லது சர்க்கரைப் பாகா? வீட்டிலேயே எளிதாகக் கண்டறியும் சில ரகசிய சோதனைகளைக் காண்போம்.
1. அசல் தேன் அடர்த்தியாக இருக்கும். தொட்டால் அதிக பிசுபிசுப்பு இருக்காது.
2. போலித் தேன் நீர்த்துப்போய் காணப்படும். தொட்டால் அதிக பிசுபிசுப்புத் தன்மையுடன் இருக்கும்.
3. ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீர் ஊற்றி ஒரு துளி தேனை விடவும். அது கரையாமல் அடியில் படிந்தால் அசல் தேனாகும்.
4. ஒருவேளை தண்ணீரில் தேன் கரைந்தால் அது போலித் தேன்.
5. தீக்குச்சியில் தேனைத் தொட்டு உரசவும். குச்சி உடனடியாக எரிந்தால் அது அசல் தேன்.
6. ஒரு துளி தேனை விரலில் வைக்கவும். அது வழிந்தோடாமல் கெட்டியாக நின்றால் சுத்தமானது.
7. வெள்ளை காகிதத்தில் தேனை விட்டுப் பாருங்கள். பின்புறம் காகிதம் ஈரமாகவில்லை என்றால் அது அசலானது.
8. ஒரு தட்டில் தேன் மற்றும் நீர் ஊற்றி சுழற்றவும். அப்படி செய்யும்போது தேனீக் கூடு வடிவம் வந்தால் அசல் தேன்.
9. இயற்கையான தேன் குளிர்காலத்தில் உறையும். இது கலப்படம் அல்ல, உண்மையான தேனின் குணம்.
10. நிறுவனங்கள் தேனைக் காய்ச்சுவதால் சத்துக்கள் அழிகின்றன. எனவே நேரடியான கிராமத்துத் தேனை வாங்குவது சிறந்தது.
இந்த எளிய சோதனைகள் மூலம் உண்மையான தேனை அடையாளம் காணுங்கள். கலப்படத்தைத் தவிர்த்து ஆரோக்கியமாக வாழுங்கள்.