புறாக்கள் ஏன் வீட்டை தேடி வருகின்றன? ஷாக்கிங் காரணம் இதுதான்!

கிரி கணபதி

புறாக்கள் அடிக்கடி வீடுகளுக்கு வருவது பலருக்கும் ஒரு பெரும் சிரமமாக இருக்கும். அதற்கான காரணங்களையும் அவற்றைத் தடுக்கும் எளிய வழிகளையும் இங்கே காண்போம்.

Pigeon

1. திறந்தவெளியில் சிந்தியிருக்கும் உணவுகள் புறாக்களை எளிதில் ஈர்க்கின்றன. எனவே மிஞ்சிய உணவுகளை வீட்டின் வெளியே கொட்டுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

Pigeon

2. வீட்டின் பால்கனி மற்றும் சன்ஷேடுகள் அவற்றிற்குப் பாதுகாப்பான உணர்வைத் தரும். மழை மற்றும் வெயிலில் இருந்து தப்பிக்க அவை இத்தகைய இடங்களையே நாடுகின்றன.

Pigeon

3. கோடைக்காலங்களில் வீட்டைச் சுற்றித் தேங்கியிருக்கும் நீர் புறாக்களை வரவழைக்கும். மாடிகளில் தண்ணீர் திறந்த நிலையில் இல்லாமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.

Pigeon

4. பழைய அட்டைப்பெட்டிகள் மற்றும் தேவையற்ற பொருட்கள் புறாக்களுக்குக் கூடுகட்ட வசதியாக இருக்கும். ஆகையால் மாடிகளில் தேவையற்ற பொருட்களைக் குவித்து வைப்பதைத் தவிர்க்க வேண்டும

Pigeon

5. புறாக்கள் வருவதைத் தடுக்க பால்கனிகளில் நைலான் வலைகளை அமைக்கலாம். இது காற்று மற்றும் வெளிச்சத்தைத் தடுக்காமல் புறாக்களை மட்டுமே உள்ளே விடாமல் பாதுகாக்கும்.

Pigeon

6. புறாக்கள் அமரும் இடங்களில் பிளாஸ்டிக் அல்லது இரும்பு முட்களைப் பொருத்தலாம். இதனால் அவற்றால் அந்த இடங்களில் அமர முடியாமல் வேறு இடத்திற்குச் சென்றுவிடும்.

Pigeon

7. பழைய குறுந்தகடுகள் அல்லது ஒளிரும் நாடாக்களைத் தொங்க விடுவது சிறந்த பலனளிக்கும். அவற்றிலிருந்து பிரதிபலிக்கும் ஒளி புறாக்களின் கண்களைக் கூசச் செய்து பயமுறுத்தும்.

Pigeon

8. காகம் அல்லது ஆந்தை போன்ற செயற்கைப் பறவை பொம்மைகளை வைக்கலாம். இவற்றை நிஜப் பறவைகள் என நினைத்துப் புறாக்கள் அந்தப் பக்கமே வராது.

Pigeon

9. புறாக்களுக்கு மிளகு அல்லது இலவங்கப்பட்டை வாசனை அறவே பிடிக்காது. இந்த வாசனையை வீட்டைச் சுற்றித் தெளிப்பதன் மூலமும் அவற்றின் வரவைக் கட்டுப்படுத்தலாம்.

Pigeon

10. புறாக்கள் ஒருமுறை வந்து சென்ற இடத்தை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். அவற்றின் எச்சங்கள் இருக்கும் வரை அவை மீண்டும் மீண்டும் வரக்கூடும்.

Pigeon

இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால் வீடுகளில் புறாக்களின் தொல்லையை முற்றிலும் தவிர்க்கலாம்.

Pigeon
Gandhi
கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்து எளிமையின் உச்சம் தொட்ட காந்தி!