கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்து எளிமையின் உச்சம் தொட்ட காந்தி!

எஸ்.மாரிமுத்து

Mahatma gandhi

1. கைராட்டை (சுயசார்பு): அந்நியத் துணிகளைப் புறக்கணித்து, இந்தியா தற்சார்பு பெற கைராட்டையை முதன்மை அடையாளமாகப் பயன்படுத்தினார்.

Mahatma gandhi | Gemini image

2. எளிமைத் தோற்றம் (கதர் ஆடை): ஆடம்பரங்களைத் தவிர்த்து, கைகளால் நெய்த கதர் வேட்டி மற்றும் துண்டை மட்டுமே அணிந்து எளிமையின் சின்னமாகத் திகழ்ந்தார்

Mahatma gandhi | Gemini image

3. இடுப்பில் கடிகாரம் (கால ஒழுக்கம்): பாக்கெட் கடிகாரத்தை நூலால் இடுப்பில் கட்டி, நேரத்தைக் கண்டிப்புடன் கடைப்பிடித்தார்.

Mahatma gandhi | Gemini image

4. மூங்கில் கைத்தடி: 1930 தண்டி யாத்திரையின் போது காகா கலேஸ்கர் பரிசளித்த மூங்கில் கைத்தடியை வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தினார்.

Mahatma gandhi | Gemini image

5. வட்ட வடிவ மூக்குக்கண்ணாடி: எளிமையின் அடையாளமான இவரது வின்சர் வகை வட்டக் கண்ணாடி, பின்னநாளில் 2.60 லட்சம் பவுண்டுகளுக்கு ஏலம் போனது.

Mahatma gandhi | Gemini image

6. சிறப்புப் பட்டங்கள்: ரவீந்திரநாத் தாகூர் இவருக்கு 'மகாத்மா' என்றும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 'தேசப்பிதா' என்றும் அழைத்தனர்.

Mahatma gandhi | Gemini image

7. சர்வதேச அகிம்சை நாள்: உலகளவில் அமைதியை வலியுறுத்திய இவரது பிறந்தநாளான அக்டோபர் 2-ஐ ஐக்கிய நாடுகள் அவை 'சர்வதேச அகிம்சை நாளாக' அறிவித்துள்ளது.

Mahatma gandhi | Gemini image

8. மூன்று குரங்குகள்: 'தீமையைக் காணாதே, கேட்காதே, பேசாதே' என்ற தத்துவத்தை உணர்த்தும் மூன்று குரங்கு பொம்மைகளைத் தன் அடையாளமாக வைத்திருந்தார்.

Mahatma gandhi | Gemini image

9. முக்கிய நூல்கள்: 'சத்திய சோதனை' (சுயசரிதை), 'ஹிந்த் ஸ்வராஜ்' (1909), 'ஆரோக்கியத் திறவுகோல்', மற்றும் 'அறவழி சமயம்'.

Mahatma gandhi | Gemini image

10. முக்கியப் போராட்டங்கள்: சம்பாரன் சத்யாக்கிரகம் (1917), ஒத்துழையாமை இயக்கம் (1920), தண்டி யாத்திரை/உப்பு சத்யாக்கிரகம் (1930), மற்றும் வெள்ளையனே வெளியேறு இயக்கம் (1942 - "செய் அல்லது செத்து மடி").

Mahatma gandhi | Gemini image
Oxford dictionary | Gemini image
ஆங்கில அகராதியை ஆக்கிரமித்த தமிழ்! உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட 10 கெத்தான வார்த்தைகள்!