இதை செய்தால் பிளாஸ்டிக் டப்பாவில் கறையே தங்காது... இல்லத்தரசிகள் கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்!

நான்சி மலர்

Plastic box cleaning

1. டப்பாவின் கறை உள்ள பகுதியில் எலுமிச்சை சாறைத் தடவி, சில மணி நேரம் வெயிலில் உலர வைத்தால் மஞ்சள் கறை மறைந்துவிடும்.

Plastic box cleaning | Gemini image

2. பேக்கிங் சோடாவுடன் சிறிது நீர் கலந்து கெட்டி பேஸ்டாக மாற்றி, கறை மீது தடவி 20 நிமிடங்கள் ஊற வைத்துப் பின் தேய்த்துக் கழுவவும்.

Plastic box cleaning | Gemini image

3. டப்பாவில் வெதுவெதுப்பான நீர், சில துளிகள் டிஷ் வாஷ் சோப் மற்றும் ஒரு பேப்பர் டவலை மடித்துப் போட்டு, மூடியை மூடி 30 விநாடிகள் தீவிரமாக குலுக்கவும்.

Plastic box cleaning | Gemini image

4. சம அளவு நீர் மற்றும் வெள்ளை வினிகரைக் கலந்து டப்பாவில் ஊற்றி, 1-2 மணி நேரம் ஊற வைத்துப் பின் வழக்கம் போல் கழுவவும்.

Plastic box cleaning | Gemini image

5. சம அளவு நீர் மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடு கலந்து ஊற்றி, சிறிது நேரம் ஊற வைத்த பின் கழுவினால் கறை எளிதில் நீங்கும்.

Plastic box cleaning | Gemini image

6. சுடுநீரில் பாத்திரங்களை லிக்விட் சோப் சேர்த்து, டப்பாவை அதில் அரை மணி நேரம் ஊற வைத்துக் கழுவவும்.

Plastic box cleaning | Gemini image

7. சானிடைசரில் உள்ள ஆல்கஹால் மஞ்சள் கறையைக் கரைக்கும்; சானிடைசரைத் தெளித்து 15 நிமிடங்கள் கழித்துத் துடைத்துக் கழுவலாம்.

Plastic box cleaning | Gemini image

8. எலுமிச்சை மூடியில் கல் உப்பைத் தொட்டு, கறை படிந்த பகுதியில் நேரடியாக அழுத்தித் தேய்த்துக் கழுவலாம்.

Plastic box cleaning | Gemini image

9. அரிசி கழுவிய நீரைக் கொட்டாமல் டப்பாவில் ஊற்றி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் சோப் போட்டுக் கழுவினால் துர்நாற்றமும் கறையும் நீங்கும்.

Plastic box cleaning | Gemini image

10. சாதாரண சோப் போட்டுக் கழுவிய பின், டப்பாவை அப்படியே சில மணி நேரம் நல்ல வெயிலில் வைத்தாலே மஞ்சள் கறை மங்கிவிடும்.

Plastic box cleaning | Gemini image
Sugar
எறும்பும் வராது ஈரமும் ஆகாது... சர்க்கரையை பாதுகாக்க சூப்பர் டிப்ஸ்!