துணி அயர்ன் பண்ணுவது இவ்வளவு ஈஸியா? லாண்ட்ரி கடைக்காரர்கள் சொல்லாத ரகசியம்!

கிரி கணபதி

துணிகளை அயர்ன் செய்வது பலருக்கும் ஒரு சலிப்பான வேலையாகவே இருக்கும். ஆனால், சில எளிய ரகசிய வழிகளைப் பயன்படுத்தினால் அயர்ன் செய்யும் நேரத்தைப் பாதியாகக் குறைப்பதுடன், துணிகளையும் கடைகளில் தேய்த்தது போலப் பளபளப்பாக மாற்ற முடியும்.

Ironing tips

1. அயர்ன் டேபிளின் உறையின் அடியில் சமையலுக்குப் பயன்படுத்தும் அலுமினியம் ஃபாயில் பேப்பரை விரித்து வையுங்கள். இது வெப்பத்தை அப்படியே பிரதிபலித்து துணியின் பின்பக்கத்தையும் சேர்த்தே அயர்ன் செய்து நேரத்தைப் பாதியாகக் குறைக்கும்.

Ironing tips

2. துணிகள் முழுமையாகக் காய்ந்து வறண்டு போயிருந்தால் சுருக்கங்களை எடுப்பது மிகவும் கடினம். எனவே, ஸ்ப்ரே பாட்டில் மூலம் லேசாகத் தண்ணீர் தெளித்து அயர்ன் செய்தால் சுருக்கங்கள் உடனடியாக மறைந்துவிடும்.

Ironing tips

3. முதலில் குறைவான வெப்பம் தேவைப்படும் பட்டு மற்றும் சிந்தடிக் துணிகளை அயர்ன் செய்யத் தொடங்குங்கள். அதன் பிறகே அதிக வெப்பம் தேவைப்படும் காட்டன் துணிகளைத் தேய்க்க வேண்டும்; இது மின்சாரத்தையும் மிச்சப்படுத்தும்.

Ironing tips

4. கருப்பு மற்றும் அடர் நிறத் துணிகளை எப்போதுமே உள்பக்கமாகத் திருப்பி வைத்து அயர்ன் செய்வது மிக நல்லது. இல்லையென்றால், அதிக வெப்பத்தினால் துணியின் மேற்புறம் ஒருவித வெள்ளைப் பளபளப்பு ஏற்பட்டு ஆடையின் அழகே கெட்டுவிடும்.

Ironing tips

5. அயர்ன் பாக்ஸை துணியின் மீது வட்டமாகச் சுழற்றித் தேய்க்கும் பழக்கத்தை உடனடியாக மாற்றுங்கள். இப்படிச் செய்தால் துணியின் தையல் இழுபட்டு, ஆடையின் வடிவம் நிரந்தரமாக மாறிவிட வாய்ப்புள்ளது.

Ironing tips

6. அயர்ன் பாக்ஸின் அடியில் கறை படிந்திருந்தால், அது வெள்ளை துணிகளை வீணாகிவிடும். அந்த கறையைப் போக்க, லேசான சூட்டில் அயர்ன் பாக்ஸை உப்பின் மீது தேய்த்தால் அடிப்பாகம் பளிச்சென்று மாறிவிடும்.

Ironing tips

7. சட்டையின் காலர் மற்றும் கைகளில் அயர்ன் செய்யும்போது, முதலில் உள்பக்கம் தேய்த்துவிட்டு பின்பு வெளிப்பக்கம் தேயுங்கள். இது அந்தப் பகுதிகளில் தேவையற்ற சுருக்கங்கள் விழுவதைத் தடுத்து, கச்சிதமான வடிவத்தைக் கொடுக்கும்.

Ironing tips

8. சட்டையில் உள்ள பட்டன்களுக்கு மேல் நேரடியாக அயர்ன் பாக்ஸை வைத்து ஒருபோதும் தேய்க்கக் கூடாது. இதனால் பட்டன்கள் உருகிவிடுவதோடு, அயர்ன் பாக்ஸின் அடிப்பகுதியிலும் கீறல்கள் ஏற்பட்டுவிடும்.

Ironing tips

9. அயர்ன் செய்தவுடன் துணிகளை அப்படியே மடித்து அலமாரியில் அடுக்கி வைக்கக் கூடாது. துணிகளில் உள்ள வெப்பம் முழுமையாகக் குறையும் வரை சிறிது நேரம் ஹேங்கரில் மாட்டி வைத்தால் சுருக்கங்கள் மீண்டும் வராது.

Ironing tips

10. சுருக்கங்கள் அதிகம் உள்ள துணிகளுக்குத் தண்ணீர் தெளிக்கும்போது, அதில் சில துளிகள் வெள்ளை வினிகர் சேர்த்துக் கொள்ளுங்கள். இது எப்பேர்ப்பட்ட கடினமான காட்டன் சுருக்கங்களையும் சில நொடிகளில் மாயமாக மறைத்துவிடும்.

Ironing tips

இந்த எளிய ட்ரிக்ஸை பயன்படுத்தி உங்களுடைய நேரத்தையும் கரண்ட்டையும் மிச்சப்படுத்துங்க, எப்போவும் கெத்தா ட்ரெஸ் பண்ணுங்க!

Ironing tips
Health checkup
<strong>சைலண்ட் கில்லர்களை வீழ்த்துங்கள்! செய்ய வேண்டிய பரிசோதனைகள் பட்டியல்!</strong>