ஆர்.ஜெயலட்சுமி
குழந்தைகளுக்கு புதியதாக டிபன் பாக்ஸ் வாங்கினால், அதை எவர்சில்வர் பாத்திரத்தில் செய்த டிபன் பாக்ஸாக வாங்குங்கள், பிளாஸ்டிக் வாங்காதீர்கள் .
எவர்சில்வர் டிபன் பாக்ஸ் வாங்கும் பொழுதும் குழந்தைகள் சாப்பிடும் அளவிற்கு சரியான அளவில் வாங்குங்கள். மிகவும் பெரியதாகவும் வாங்காமல் மிகவும் சிறியதாகவும் வாங்காமல் சரியான அளவில் வாங்குங்கள்.
டிபன் பாக்ஸ் அல்லது சிறிய டிபன் கேரியரில் குழந்தைகளின் பெயரை கட்டாயம் எழுத தவறாதீர்கள் கடையிலேயே எழுதிக் கொடுப்பார்கள். பள்ளியில் மறந்து வைத்து விட்டு வந்தாலும் அதை கண்டுபிடிக்க சுலபமாக இருக்கும்.
டிபன் பாக்ஸில் மிக மிக இறுக்கமாக மூடும் வகைகளை வாங்காதீர்கள். திறக்க சிரமப்படுவார்கள், மிகவும் சுலபமாக திறக்கும் வகையில் உள்ளதையும் வாங்காதீர்கள். ஏனென்றால் திரவப் பொருட்கள் வெளியே சிந்துவதற்கு ஏதுவாக அமைந்து விடும்.
அடுத்ததாக ஸ்நாக்ஸ் பாக்ஸ் வாங்கவும். அது கூட இப்பொழுது எல்லோரும் பிளாஸ்டிக்கால் செய்ததை வாங்கி கொடுக்கிறார்கள் .
நெகிழி உடலுக்கு கெடுதல் என தெரிந்தே வாங்குகிறார்கள். அதற்கு பதிலாக அதையும் சிறிய அளவு எவர்சில்வர் டிபன் பாக்ஸாக வாங்கி அதனுள் போட்டுக் கொடுக்கலாம்.
மற்றொன்று வாட்டர் பாட்டில், வாட்டர் பாட்டில் பிளாஸ்டிக் பாட்டிலாக வாங்காதீர்கள். அதற்கு பதிலாக சில்வர் கோட்டிங் அல்லது சில்வரிலேயே தயாரிக்கும் வாட்டர் பாட்டில்கள் கிடைக்கின்றன. அவற்றை வாங்குங்கள்.
வாட்டர் பாட்டிலிலும் குழந்தையின் பெயரை அடித்து விடலாம். குழந்தை வாட்டர் பாட்டில் பள்ளியிலேயே வைத்து விட்டு வந்தாலும் மறுநாள் அதை பத்திரமாக அவர்கள் நம்மிடம் எடுத்து தருவதற்கு உதவியாக இருக்கும்.
அடுத்ததாக குழந்தைகள் சாப்பிடுவதற்கு ஸ்பூன் கொடுப்போம். அந்த ஸ்பூன் கூட சில்வரில் உள்ள ஸ்பூனாக பார்த்துக் கொடுங்கள் பிளாஸ்டிக் ஸ்பூன் கொடுக்காதீர்கள்.
குழந்தைகள் மாலை வீட்டிற்கு கொண்டு வந்த உடன் அனைத்து பொருட்களும் சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு உடனே அதை கழுவி காய வையுங்கள். அப்போதுதான் மறுநாள் காலையில் அது எங்கு இருக்கிறது என்று தேட வேண்டிய அவசியம் இருக்காது.
குழந்தைகளை பள்ளிக்கு புறப்படும் அவசரத்தில் அதைத் தேடவும் முடியாது அதனால் ஒரே இடத்தில், எப்பொழுதும் எங்கு வைப்போமோ அங்கேயே வைத்து எடுங்கள். காலை பரபரப்பில் அவற்றைத் தேடி அலைந்து டென்ஷன் ஆவது குறையும்.
காலையில் முதல் வேலையாக வாட்டர் பாட்டிலில் தண்ணீரை நிரப்பி வைத்து விடுங்கள்.
குழந்தைகளின் லஞ்ச் பேக்கில் நன்றாக துடைத்துவிட்டு டிபன் பாக்ஸ் தண்ணீர் பாட்டில், ஸ்நாக்ஸ் பாக்ஸ் இவைகளை வைத்தால் கெட்ட வாடை வராது.
நெகிழி இல்லாமல் இவ்வாறு பார்த்து பார்த்து நாம் வாங்கி செய்தோமானால், நம் எதிர்கால சந்ததிகளும் அதேபோல் பயன்படுத்த ஆரம்பித்து விடுவார்கள்.