கிரி கணபதி
சாலையைக் கடக்கும்போது பெரியவர்கள் கையை எப்போதும் பிடிக்கும்படி குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுங்கள்.
போக்குவரத்து சிக்னல்கள், மற்றும் சாலை அடையாளங்கள் பற்றி அவர்களுக்குக் கற்பிக்கவும்.
அடிப்படையான சாலை விதிகள் மற்றும் சாலை பாதுகாப்பு முறைகள் பற்றி கற்பித்து அறிவுறுத்தவும்.
குழந்தைகள் விளையாடும் மைதானம், புல்வெளி, ரப்பர் அல்லது மணல் போன்ற மென்மையான மேற்பரப்பைக் கொண்டிருப்பதை உறுதி செய்யவும்.
விளையாட்டு மைதானங்களில் உள்ள உபகரணங்கள் நல்ல நிலையில் உள்ளதா? கூர்மையான முனைகள் இல்லாமல் பாதுகாப்பாக உள்ளதா? என்பதை சரி பார்க்கவும்.
அவர்களது வயதுக்கு ஏற்ற பகுதி மற்றும் உபகரணங்களை பயன்படுத்த குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள்.
நீச்சல் குளங்கள், குளியல் தொட்டிகள் மற்றும் இயற்கை நீர் நிலைகள் உட்பட குழந்தைகள் செல்லும் பகுதிகளைக் கண்காணிக்கவும்.
முடிந்தால் சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக் கொடுங்கள். நீச்சல் குளங்களுக்கு உங்களது மேற்பார்வை இன்றி அவர்களை அனுப்ப வேண்டாம்.
ஆழமான அல்லது வேகமாக ஓடும் தண்ணீருக்கு அருகில் விளையாடுவதால் ஏற்படும் ஆபத்துகள் பற்றி குழந்தைகளுக்குக் கற்பிக்கவும்.