மகாலெட்சுமி சுப்ரமணியன்
1/12. குழந்தைகளுக்கு இனிப்பு சாக்லேட்டுக்குப் பதிலாக தேனில் ஊறிய நெல்லிக்காயை கொடுக்கலாம்.
2/12. தினமும் கீரையை அவர்களுக்கு பிடித்த விதத்தில் சப்பாத்தியாக செய்து கொடுக்க விரும்பி சாப்பிடுவார்கள்.
3/12. தினமும் பழங்கள், பேரீச்சம் பழம், அத்திப்பழம் கொடுத்து வர அனைத்து விதமான சத்துக்களும் அவர்களுக்கு கிடைக்கும்.
4/12. கிஸ்மிஸ் பழத்தை தண்ணீரில் ஊற வைத்து கொடுக்க உடல்நலன் மேம்படுவதோடு மலச்சிக்கல் பிரச்சனை இருக்காது.
5/12. வேர்க்கடலை, பாதாம் இவற்றை ஸ்நாக்ஸாக கொடுக்க சத்துக்கள் சேரும்.
6/12. காய்கறிகளை சூப்பாக வைத்துக் கொடுக்க குடித்து விடுவர்.
7/12. பூரியை மைதாவில் போடாமல் சிறுதானிய மாவில் பாலக் பூரியாக, ஸ்டஃப்டு பூரியாக செய்து கொடுக்க விரும்பி சாப்பிடுவர்.
8/12. எளிமையாக தேங்காயை பச்சையாக சாப்பிட பழக்க அவர்கள் பற்கள் உறுதியாவதோடு, வயிற்று பிரச்சனைகள் வராமல் தடுக்கும். பழங்களை கடித்து சாப்பிட பழக்க வேண்டும்.
9/12. உணவில் எல்லா சுவைகளையும் சாப்பிட வைக்க தனியாக சத்துக்களுக்கென்று மெனக்கெட தேவையிருக்காது.
10/12. முட்டையை வெரைட்டியாக செய்து கொடுக்க ஆரோக்கியம் மேம்படும்.
11/12. விளையாடி விட்டு வந்ததும் ஜீஸ், ஐஸ் வாட்டர் குடிப்பதற்கு பதிலாக சர்பத், லெமன் ஜுஸ் என வீட்டிலேயே தயாரித்து கொடுக்க உடல்நலம் அதிகரிக்கும்.
12/12. வெண்ணெய், அசைவ உணவுகளை அளவாக கொடுக்க சத்துக்கள் சேரும். இவ்வாறு பல்வேறு வழிகளில் அவர்களது ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.