சி.ஆர்.ஹரிஹரன்
வாகனம் ஓட்டும்போது போன் வந்தால் எடுக்க வேண்டாம். கூப்பிடுவது எமனாக கூட இருக்கலாம்.
உங்களை நம்பி உங்கள் குடும்பம், சாலையில் வேண்டாமே அசுர வேகம்.
வண்டியின் வேகத்தைக் குறையுங்கள். விபத்தை தவிருங்கள்.
சாலையில் செல்ஃபோன் பேச்சு, விபத்தினால் உயிரே போச்சு.
நூறு கிலோமீட்டர் வேகம், 108ல் போக யோகம்.
வியர்வை சிந்தி உழைத்த பணம், வீணாய்ப் போகுது விபத்தில்.
வேகம் சோகத்தை தரும், நிதானம் நிம்மதியைத் தரும்.
அவசரம் என்ன அவசரமோ? போன உயிர் திரும்பி வருமோ?
சமயத்தை மிச்சப்படுத்தலாமென்று செல்ஃபோனில் பேசிக்கொண்டு வண்டி ஓட்ட வேண்டாம். சமயம் மிச்சப்படுவது எமதர்மனுக்குத்தான்.
வாகனம் ஓட்டும்போது நிதானம், இல்லாவிட்டால் அதளபாதாளம்.
வண்டி ஓட்டும்போது சமயம் பெரிதல்ல, நமது உயிர்தான் பெரிது.
தலைக்கவசம் நமது உயிர்க்கவசம்.
நடைபாதையில் நடப்போம், நலமுடனே பயணிப்போம்
சாலை விதிகளை மதிப்போம், சங்கடங்களை தவிர்ப்போம்.
சிக்னலை மதிக்கவில்லையென்றால் சிக்கலில் விழுவீர்கள்.
படியில் பயணம், நொடியில் மரணம்.
போதையில் பயணம், பாதையில் மரணம்.