பாத்திரங்கள் கழுவும் முன் பத்திரம்!

தா.சரவணா

சமைத்த பாத்திரங்களைச் சுத்தமாக வைத்திருப்பதன் அவசியம் தெரிந்தாலும், அதை எப்படி சாத்தியப்படுத்துவது என்பதில்தான் இருக்கிறது சவால். அந்தச் சவாலை எதிர்கொள்ள பயனுள்ள டிப்ஸ் இதோ!

Dish washing tips | Imge Credit: pinterest

சமைக்கும்போதே முடிந்தவரை பாத்திரங்களைத் துலக்கி வைத்து விடுங்கள். உதாரணமாக, புளி கரைத்த கிண்ணத்தை அப்படியே சிங்கில் போடாமல் ரசம் கொதிக்கும்போதே கழுவி வைத்துவிடுங்கள். சமைத்து முடித்து வெளியே வரும்போது, சிங்கில் எந்தப் பாத்திரமும் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

Dish washing tips | Imge Credit: pinterest

பால் காய்ச்சிய பாத்திரம் போன்றவற்றில் சிறிது தண்ணீர் ஊற்றிவைத்தால், துலக்கும்போது அதிகம் தேய்க்க வேண்டியதில்லை.

Dish washing tips | Imge Credit: pinterest

முடிந்தால் தேநீர் பைகள் பயன்படுத்துங்கள். தேநீர் கொதிக்க வைத்த பாத்திரம் துலக்குவதுதான் எரிச்சல். அதேபோல காபி, டீ குடித்தவுடன் டம்ப்ளர்களை உடனடியாக கழுவி வைப்பது சாலச் சிறந்தது.

Dish washing tips | Imge Credit: pinterest

சாப்பிட்டு கை கழுவும்போதே தட்டையும் கழுவிவிடுங்கள். இது மிகவும் பயனளிக்கும்.

Dish washing tips | Imge Credit: pinterest

பாத்திரம் துலக்கும்போது, பெரிய பாத்திரத்தில் இருந்து தொடங்குங்கள். விரைவில் சிங்க் காலியவதால் பெரிய சுமையாகத் தெரியாது.

Dish washing tips | Imge Credit: pinterest

அமாவாசை மற்றும் சிறப்பு நாட்களில் இலை வாங்கும்போது, சிறிய வாழை இலை தட்டுகள் கடையில் வாங்கி வைத்துகொள்ளுங்கள். மாலை சிற்றுண்டியை தட்டின்மீது இலை வைத்து பரிமாறுங்கள்.

Dish washing tips | Imge Credit: pinterest

கண்ணாடி, பீங்கான் பொருட்களை உபயோகியுங்கள்.

Dish washing tips | Imge Credit: pinterest

விளிம்புகள் தட்டையாக உள்ள பாத்திரங்கள், டம்ப்ளர்களை பயன்படுத்துங்கள். விளிம்புகள் மடித்து இருப்பதைவிட இவற்றை துலக்குதல் எளிது.

Dish washing tips | Imge Credit: pinterest

சாதம் சமைத்தப் பாத்திரத்தை சிங்கில் போடும்போது தண்ணீர் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் அதைக் கழுவுவதற்கு மிகவும் எளிதாக இருக்கும். இல்லையென்றால் காய்ந்த சோற்று பருக்கைகள் விரல்களில் பட்டு கிழிப்பதற்குக்கூட அதிக வாய்ப்புண்டு.

Dish washing tips | Imge Credit: pinterest

சாப்பிட்டு முடித்ததும் வீணாகும் காய்கறி, தோல்கள் ஆகியவற்றைச் சிங்கில் போடுவதற்கு முன்பு குப்பைத் தொட்டியில் போடவேண்டும். இல்லையென்றால் இந்த வீணானப் பொருட்கள் சிங்கில் இருந்து கழிவுநீர் வெளியேறுவதற்குத் தடையாக இருக்கும்.

Dish washing tips | Imge Credit: pinterest

அசைவ உணவுகள் சமைக்கும் பாத்திரங்களை ஒன்றுக்கு இரண்டு முறை கழுவுவது நல்லது. அப்போதுதான் அசைவ வாடை அந்தப் பாத்திரத்திலிருந்து போகும்.

Dish washing tips | Imge Credit: pinterest

90 சதவீத வீடுகளில் அடுப்படியில்தான் சிங்க் அமைக்கப்பட்டிருக்கும். அதனால் அதை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்வது அனைவருக்கும் நல்லது. சிறிது சுத்தம் இல்லை என்றாலும் அதிலிருந்து வரும் நாற்றம், சமையல் தரத்தையே குறைத்துவிடும்.

Dish washing tips | Imge Credit: pinterest

வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தால்கூட கிச்சனுக்குள் வந்து அவர்கள் முதலில் பார்க்க விரும்புவது சிங்க் ஆகத்தான் இருக்கும். அதனால் அதை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்வது நல்லது.

Dish washing tips | Imge Credit: pinterest
Motivational Quotes
உங்கள் வாழ்க்கையை மாற்றும் பொன்மொழிகள்!