வாசுதேவன்
நாம் துவண்டு இருக்கும் சமயங்களில், தத்துவங்களை படித்தால், நமது எண்ணங்களில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. அந்தவகையில், உங்கள் வாழ்க்கையை மாற்றும் சில பொன்மொழிகளைப் பார்ப்போம்.
ஒவ்வொருவரின் வாழ்க்கைப் பயணமும் வேறுபட்டது.
கடந்தவற்றை மாற்ற முடியாது.
அளவுக்கு அதிகமான சிந்தனை, மகிழ்ச்சியை காணாமல் போக செய்யும்.
தப்பான எண்ணத்தை விடாப்பிடியாக பிடித்துக் கொள்வதை விட மாற்று எண்ணத்திற்கு மாறுவது பயனளிக்கும்.
பரீட்சித்துப் பார்க்காத வாழ்க்கை, வாழ்வதற்கு உபயோகமற்றது.
கல்வி அறிவு, நெருப்பு ஒளியை பிரகாசப் படுத்த உதவி செய்யும்.
உறுதியான மனது யோசனைகள் பற்றி விவாதிக்கும். சராசரி மனது நடந்தவை பற்றி விவாதிக்கும். உறுதியற்ற மனது பிறரைப் பற்றி விவாதிக்கும்.
புத்தகங்களில் மவுனமாக வாசிக்க வேண்டிய பக்கங்கள் உண்டு என்பதை மறக்க கூடாது.
தன்னால் செய்ய முடியும் என்று அறிந்தும் செய்யாமல் இருப்பவனும் சோம்பேறியே.
போதுமென்ற மனது இயற்கையின் செல்வம். அளவுக்கு மிகுந்த ஆடம்பரம் செயற்கையின் ஏழ்மை.
ஒவ்வொரு செயலுக்கும் இன்பம் உண்டு. அதற்கு உண்டான விலையும் உண்டு.
அறிவு நல்லதற்கு வழி வகுக்கும். அறியாமை கெடுதலுக்கு வழி காட்டும்.
பதிலளிக்க கேள்வியை உள்வாங்கி நன்கு புரிந்துக் கொள்.
உன்னைப் பற்றி அறிந்துக் கொள்ள, உன்னைப் பற்றி ஆழமாக சிந்திக்கவும்.
இயற்கை அளித்த பொக்கிஷம் மனநிறைவு.
என்னால் யாருக்கும் எதுவும் கற்றுக் கொடுக்க முடியாது. என்னால் பிறரை சிந்திக்க வைக்க முடியும்.