ஸ்மார்ட் இல்லத்தரசிகளுக்கு மட்டுமே தெரிந்த சூப்பர் ஹோம் கேர் டிப்ஸ்!

எஸ்.ராஜம்

1/13. காய்கறி மற்றும் பழங்களை சிறிதளவு வினிகர் கலந்த குளிர்ந்த நீரில் ஒரு சில நிமிடங்கள் போட்டு வைத்தால் கிருமிகள் இறந்து விடும்.

fruits and vegetables

2/13. பூண்டு, வெங்காயம் போன்றவைகளை நறுக்குவதால் கத்தியில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்க, சிறிதளவு உப்பை கத்தியில் தடவி குளிர்ந்த நீரில் கழுவவும்.

onion and garlic

3/13. பால், பாத்திரத்தின் அடியில் ஒட்டிக் கொள்ளாமல் இருக்க பாத்திரத்தை முதலில் குளிர்ந்த நீரால் நன்கு கழுவ வேண்டும்.

Milk

4/13. கோதுமை உள்ள பாத்திரத்தில் ஒரு கொத்து வெந்தயக் கீரையை போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.

wheat flour in bottle

5/13. இரவில் படுப்பதற்கு முன் ப்ளீச்சிங் பவுடரைச் சிறிது எடுத்து கழிப்பறையிலும், குளியலறையிலும் தூவி விட்டு அப்படியே விட்டு விட, கரப்பான் பூச்சித் தொல்லை இருக்காது.

toilet cleaning

6/13. தேங்காய் மூடியை தண்ணீரில் வைத்தால் அல்லது முடியில் சிறிது உப்பை தடவி வைத்தால் கெடாமல் இருக்கும்.

coconut

7/13. வீட்டு ஜன்னல்களுக்கு கரும் பச்சை, கருநீலத்தினால் ஆன திரைச் சீலைகளைப் பயன்படுத்தினால் வெயிலின் உஷ்ணம் உள்ளே வராது.

Curtains

8/13. வாசனை கம்மியான ஊதுவத்திகள் மீது சிறிது யூடிகோலனைத் தடவிய பின் ஏற்றி வைத்தால் வீடு முழுவதும் வாசனை தூக்கும்.

Incense stick

9/13. மொசைக் தரையில் அழுக்கு நீங்கி பளபளப்பாக இருக்க, வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் சாக்பீஸ் தூள் மற்றும் சலவை சோடா கலந்து ஸ்பாஞ்சை வைத்து துடைக்க வேண்டும்.

clean floor

 10/13. நம் வீட்டில் உபயோகப் படுத்தும் கால்மிதிகளை நான்கு மாதங்களுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது.

door-mat,

 11/13. வீட்டில் எதிர்பாராவிதமாக அதிக அளவு புகை ஏற்பட்டால், வீட்டின் நடுவில் ஒரு ஈரத்துணியை தொங்க விட்டால் போதும். புகை காணாமல் போய்விடும்.

smoke in home

12/13. கத்தியைச் சூடாக்கி பிரெட் துண்டுகளை வெட்டினால், பிசிறு இல்லாமல் நினைத்த படி வெட்டலாம்.

slice bread in knife

13/13. முகம் பார்க்கும் கண்ணாடியின் மீது தேயிலையினால் துடைத்தால் அழுக்கு நீங்கிக் கண்ணாடி பளபளவென்று இருக்கும்.

mirror clean
sweet lime juice
குளிர்ச்சிக்கு சாத்துக்குடி இருக்க கோடையைப் பற்றிய பயமேன்?!