இந்திராணி தங்கவேல்
1/10. சாத்துக்குடி பழம் கோடைகாலத்திற்கு ஒரு வரப்பிரசாதம். சாத்துக்குடியின் நன்மைகள் பற்றி இப்பதிவில் காண்போம்.
2/10. இது இயற்கையாகவே உடலை குளிர்ச்சியாக வைக்கும் திறன் கொண்டது. கோடை வெயிலால் ஏற்படும் சோர்வை நீக்கி உடனடி ஆற்றலைத் தரும்.
3/10. வைட்டமின் சி அதிகம் உள்ளதால் சளி மற்றும் காய்ச்சல் வராமல் தடுக்க உதவும்.
4/10. இது ரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கி ரத்த ஓட்டத்தை சீராக்கும்.
5/10. நீங்கள் வறண்ட சருமத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் சாத்துக்குடி உங்களுக்கு இரு மடங்கு பலன் தரும்.
6/10. சாத்துக்குடி சாற்றுடன் சிறிதளவு தேன் கலந்து முகத்தில் தடவினால் வறண்ட சருமம் மென்மையாகும் .
7/10. இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் சரும சுருக்கங்களைப் போக்கி இளமையாக வைத்திருக்க உதவும்.
8/10. வெறும் வயிற்றில் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பது கல்லீரலை சுத்தப்படுத்த உதவும்.
9/10. சாத்துக்குடி சாற்றில் ஒரு சிட்டிகை கருப்பு உப்பு அல்லது தேன் கலந்து குடித்தால் சுவையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
10/10. கோடைகாலம் தொடங்கி விட்டதால் ,தினமும் ஒரு சாத்துக்குடி சாப்பிடுவது உங்கள் சருமத்தை வறட்சியிலிருந்து பாதுகாக்கும்.