நான்சி மலர்
கோடைகாலத்தில் வெப்பம் அதிகரிக்கும் போது பூச்சிகளின் தொல்லை அதிகரிப்பது இயல்பு. உங்கள் வீட்டிலிருந்து பூச்சிகளை விரட்ட சில எளிய மற்றும் இயற்கை வழிகள்...
1/10. பூச்சிகள் எப்போதும் நீர் தேங்கியிருக்கும் இடங்களை நோக்கி வரும். வாஷ் பேசின் மற்றும் குழாய்களில் கசிவு இருந்தால் உடனே சரிசெய்யவும்.
2/10. தண்ணீரில் சிறிது வேப்ப எண்ணெய் மற்றும் சோப்பு நீர் கலந்து செடிகள் மீதும், ஜன்னல் ஓரங்களிலும் தெளித்தால் பூச்சிகள் வராது.
3/10. உணவுப் பொருட்களை எப்போதும் மூடி வைக்கவும். பழங்கள் மற்றும் காய்கறிகளை நீண்ட நேரம் வெளியில் வைக்காமல் குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம்.
4/10. வீட்டில் உள்ள குப்பைகளை தினமும் அப்புறப்படுத்தவும். குப்பைத் தொட்டிகளை மூடி வைத்துப் பயன்படுத்தவும் மற்றும் வாரத்திற்கு ஒருமுறை அவற்றை சோப்பு நீர் கொண்டு கழுவவும்.
5/10. எறும்புகள் வரும் பாதையில் மஞ்சள் தூள், மிளகுத் தூள் அல்லது பட்டைத் தூள் (Cinnamon) தூவினால் அவை வீட்டிற்குள் வராது.
6/10. மாலை நேரங்களில் ஜன்னல்களை மூடி வைக்கவும். வீட்டிற்குள் நொச்சி இலை அல்லது சாம்பிராணி புகை போடுவது கொசுக்களை விரட்ட உதவும்.
7/10. புதினா (Mint), துளசி, லெமன்கிராஸ் (Lemongrass) போன்ற செடிகளை ஜன்னல் ஓரங்களில் வளர்ப்பது பூச்சிகளை இயற்கையாகவே தடுக்கும்.
8/10. கோடையில் காற்றுக்காக நாம் ஜன்னல்களைத் திறந்து வைப்போம். அப்போது ஈக்கள் மற்றும் கொசுக்கள் வராமல் தடுக்க, ஜன்னல்களில் மெல்லிய வலைகளை பொருத்தலாம்.
9/10. எலுமிச்சை பழத்தை பாதியாக வெட்டி அதில் சில கிராம்புகளை குத்தி வைத்தால் ஈக்கள் அந்த இடத்திற்கு வராது.
10/10. மாலை நேரங்களில் மஞ்சள் நிற விளக்குகளை (Yellow LED) பயன்படுத்துவது பூச்சிகளின் வருகையைக் குறைக்க உதவும்.