எச்சரிக்கை பட்டியல்: பிரியாணியுடன் சேர்க்கவே கூடாத 10 'மோசமான' காம்போக்கள்!

நான்சி மலர்

பிரியாணியுடன் சில உணவுகளைச் சேர்த்து உண்ணும்போது செரிமானக் கோளாறுகள் அல்லது உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பிரியாணியுடன் தவிர்க்க வேண்டிய 10 உணவுகள்.

biriyani

1/10. பிரியாணி சாப்பிட்ட உடனே அதிக இனிப்புள்ள உணவுகளைச் சாப்பிடுவது ரத்தத்தில் சர்க்கரை அளவை திடீரென உயர்த்தும்.

sweets

2/10. சூடான பிரியாணிக்கு பின் ஐஸ் வாட்டர் அல்லது குளிர்ந்த குளிர்பானங்களைக் குடிப்பது செரிமான அமிலங்களின் செயல்பாட்டைக் குறைக்கும்.

ice water

3/10. பிரியாணி போன்ற கனமான உணவைச் சாப்பிட்ட பிறகு பழங்களைச் சாப்பிட்டால், அவை வயிற்றில் நொதித்தல் (Fermentation) செயலைத் தூண்டி அஜீரணத்தை உண்டாக்கும்.

fruits

4/10. பிரியாணியில் உள்ள இரும்புச்சத்தை உடல் உறிஞ்சுவதை டீயில் உள்ள 'டானின்' (Tannin) தடுக்கிறது. மேலும் இது அசிடிட்டியை அதிகரிக்கக்கூடும்.

tea

5/10. பிரியாணியுடன் பால் சார்ந்த இனிப்புகளைச் சாப்பிடுவது சிலருக்கு சரும ஒவ்வாமை அல்லது வயிற்றுப் பிடிப்பை ஏற்படுத்தலாம்.

milk

6/10. பிரியாணியுடன் வடை, பஜ்ஜி போன்ற எண்ணெயில் பொரித்த உணவுகளைச் சேர்க்கும்போது கல்லீரலுக்கு அதிக வேலைப்பளுவை ஏற்படுத்தும்.

oily foods

7/10. ஆயுர்வேதத்தின்படி, அதிக மசாலா மற்றும் இறைச்சி உள்ள உணவுகளுடன் முள்ளங்கியைச் சேர்ப்பது உடலில் நச்சுத்தன்மையை உருவாக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

radish

8/10. கோழி அல்லது ஆட்டுக்கறி பிரியாணியுடன் மீன் வறுவலைச் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. வெவ்வேறு புரதங்கள் ஒன்றாக சேரும்போது செரிமான சிக்கல்கள் வரலாம்.

fish

9/10. ஆரஞ்சு அல்லது எலுமிச்சை ஜூஸ் போன்ற அமிலத்தன்மை கொண்ட பானங்களை பிரியாணியுடன் குடிப்பது நெஞ்செரிச்சலை உண்டாக்கும்.

orange

10/10. பிரியாணியுடன் சிப்ஸ் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளைச் சேர்ப்பது உடலில் சோடியம் அளவை அதிகரித்து தாகத்தையும், அசதியையும் உண்டாக்கும்.

chips
moringa plant
மாடியில் முருங்கை மரம் வளர்ப்பது இவ்வளவு ஈஸியா? இந்த 1 ட்ரிக் போதும்!