பழைய பேப்பரில் இவ்வளவு யூஸ் இருக்கா? ஷாக்கிங் சீக்ரெட்ஸ்!

கிரி கணபதி

பழைய செய்தித்தாள்களைப் பொருட்களைக் கட்ட மட்டுமே நாம் பொதுவாகப் பயன்படுத்துகிறோம். ஆனால் அவற்றை இன்னும் பல பயனுள்ள வழிகளில் எப்படிச் சிறப்பாகப் பயன்படுத்தலாம் எனப் பார்க்கலாம்.

Old Newspaper

1. கண்ணாடி ஜன்னல்களைச் சுத்தமாகத் துடைக்கப் பழைய தாள்களைப் பயன்படுத்தலாம். 

Old Newspaper

2. பயன்படுத்திய காலணிகளுக்குள் கசக்கிய தாள்களை வைக்கலாம். இது உள்ளே இருக்கும் ஈரப்பதத்தையும் துர்நாற்றத்தையும் மிக விரைவாக உறிஞ்சி அகற்றிவிடும்.

Old Newspaper

3. காய்களை விரைவாகப் பழுக்க வைக்கத் தாள்களில் சுற்றி வைக்கலாம். இது வெப்பத்தை உள்ளே தக்கவைத்துச் சீராகப் பழுக்கப் பெரிதும் உதவும்.

Old Newspaper

4. குளிர்சாதனப் பெட்டியில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்க இவை உதவும். ஈரமான தாள்களைச் சுருட்டி உள்ளே வைத்தால் கெட்ட வாடை எளிதில் நீங்கும்.

Old Newspaper

5. தோட்டங்களில் களைகள் வளராமல் தடுக்கத் தாள்களைப் பரப்பி வைக்கலாம். இது ஈரப்பதத்தைப் பாதுகாப்பதோடு செடிகளுக்கு நல்ல உரமாகக் காலப்போக்கில் மாறும்.

Old Newspaper

6. உடையக்கூடிய கண்ணாடிப் பொருட்களைப் பாதுகாப்பாகக் கட்டிவைக்க இவை பயன்படுகின்றன. பயணங்களின்போது இவை சிறந்த அதிர்வுத் தடுப்பானாகச் செயல்பட்டுப் பொருட்களைப் பாதுகாக்கும்.

Old Newspaper

7. எண்ணெய் படிந்த பாத்திரங்களைச் சுத்தம் செய்ய இவை சிறந்தவை. சுடுநீரில் நனைத்த தாள்களைக் கொண்டு துடைத்தால் பிசுபிசுப்பு முற்றிலும் நீங்கிவிடும்.

Old Newspaper

8. தரைவிரிப்புகளுக்கு அடியில் பழைய தாள்களை அடுக்கி வைக்கலாம். இது குளிர்காலத்தில் தரையிலிருந்து வரும் குளிரைத் தடுத்து நல்ல வெப்பத்தைத் தரும்.

Old Newspaper

9. மழையில் நனைந்த குடைகளை உலர்த்த இவற்றைப் பயன்படுத்தலாம். ஈரமான குடையின் உள்ளே தாள்களை வைத்தால் நீரை உடனடியாக ஈர்த்துக்கொள்ளும்.

Old Newspaper

10. மர பீரோக்களில் துணிகளை வைக்கும் முன் தாள்களை விரிக்கலாம். இது பூச்சிகள் வராமல் தடுப்பதோடு துணிகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும்.

Old Newspaper

இந்த எளிய வழிகளைப் பின்பற்றினால் பழைய செய்தித்தாள்கள் பலவிதங்களில் வீணாகாமல் முழுமையாகப் பயன்படும். 

Old Newspaper
Braid
சாதாரண ஜடைன்னு நினைக்காதீங்க... இதோட ஆயிரக்கணக்கான ஆண்டு வரலாறு உங்களை வியக்க வைக்கும்!