நான்சி மலர்
உங்கள் பர்சில் இந்த 10 பொருட்கள் வைத்திருந்தால் பண வரவு அதிகரிக்குமாம். என்னென்ன பொருட்கள் என்பதைப் பற்றிய நம்பிக்கைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
பர்ஸில் ஒரு சிறிய வெள்ளி நாணயத்தை வைப்பது சுக்கிரனின் அருளைப் பெற்றுத் தரும். இது பண வரவை அதிகரிப்பதோடு, வீண் செலவுகளையும் குறைக்கும்.
21 அரிசி பருக்கைகளை ஒரு சிறிய காகிதத்தில் மடித்து வைக்கலாம். இது வீண் விரயங்களை தடுத்து தானிய மற்றும் பணச் செழிப்பைத் தரும்.
அரச மரத்தின் இலை மிகவும் புனிதமானது. அதில் 'ஸ்ரீ' (Shree) என்று எழுதி பர்ஸில் வைத்தால் செல்வம் பெருகும் என நம்பப்படுகிறது.
ஒரு சிறிய துண்டு பச்சை கற்பூரத்தை ஒரு துணியில் முடிந்து பர்ஸில் வைத்தால், நேர்மறை ஆற்றல் அதிகரித்து பணம் சேரும்.
மூன்று ஏலக்காய்களை பர்ஸில் வைப்பது அதிர்ஷ்டத்தை உண்டாக்கும். இது பணத் தடையை நீக்கி, புதிய வாய்ப்புகளை உருவாக்கும்.
9 கிராம்புகளை பர்ஸில் வைப்பது எதிர்மறை ஆற்றல்களைத் தடுத்து, உங்கள் பணத்தைப் பாதுகாக்கும்.
ஒரு சிறிய லவங்கப்பட்டை துண்டை பர்ஸில் வைப்பது 'பண காந்தம்' போல செயல்பட்டு செல்வத்தை ஈர்க்கும்.
ஒரு சிறிய கோமதி சக்கரத்தை பர்ஸில் வைத்தால் தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும்.
காய்ந்த தாமரைத் தண்டு அல்லது வேரின் ஒரு சிறிய பகுதியை பர்ஸில் வைப்பது ஐஸ்வர்யத்தை அளிக்கும்.
உப்பு எதிர்மறை ஆற்றலை உறிஞ்சும் தன்மை கொண்டது. ஒரு சிறிய காகிதத்தில் சிறிதளவு கல் உப்பை மடித்து பர்ஸின் வைக்கவும். இது உங்கள் பணத்தின் மீதான திருஷ்டியை நீக்கும்.