நான்சி மலர்
கோடைக்காலம் என்றாலே வெயிலும் வேர்வையும் நம்மை வாட்டி வதைக்கும். ஆனால், சில எளிய வழிமுறைகளை (Hacks) பின்பற்றுவதன் மூலம் இந்த 10 பொதுவான கோடைக்காலப் பிரச்னைகளை நாம் சுலபமாகச் சமாளிக்கலாம்.
வெயிலில் செல்லும்போது உடல் வெப்பநிலை அதிகரிப்பு: உங்கள் மணிக்கட்டுகள் (Wrists) மற்றும் கழுத்தின் பின்புறத்தில் குளிர்ந்த நீரை 30 விநாடிகள் ஊற்றுங்கள். இங்கு ரத்த நாளங்கள் தோலுக்கு அருகில் இருப்பதால், உடல் உடனடியாகக் குளிர்ச்சியடையும்.
அதிகப்படியான வேர்வையால் சரும அரிப்பு மற்றும் தடிப்பு: சந்தனம் அல்லது கற்றாழை ஜெல்லுடன் (Aloe Vera) சிறிதளவு துளசி இலைகளைச் சேர்த்துத் தடவுங்கள். இது சருமத்தை குளிர்ச்சியாக வைப்பதோடு கிருமிகளையும் அழிக்கும்.
வேர்வையினால் உடலில் உள்ள நீர் மற்றும் தாதுக்கள் வெளியேறி சோர்வு: வெறும் தண்ணீரை மட்டும் குடிக்காமல், அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து 'எலக்ட்ரோலைட்' பானமாக பருகுங்கள்.
சூரியனின் புறஊதாக் கதிர்கள் சருமத்தை சிவக்க வைத்து எரியச் செய்தல்: குளிர்ந்த பாலில் (Cold Milk) பஞ்சை நனைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் ஒத்தடம் கொடுங்கள். பாலில் உள்ள லாக்டிக் அமிலம் தோலைச் சரிசெய்து எரிச்சலைக் குறைக்கும்.
கோடையில் காலணிகளுக்குள் வேர்வை தங்கி பாக்டீரியாக்கள் வளரும்: இரவு தூங்குவதற்கு முன் உங்கள் காலணிகளுக்குள் பயன்படுத்தாத 'டீ பேக்' (Dry Tea Bags) அல்லது சிறிதளவு 'பேக்கிங் சோடா' போட்டு வையுங்கள்.
வெள்ளை நிற சட்டைகளில் அக்குள் பகுதியில் மஞ்சள் கறைகள்: துணியைத் துவைப்பதற்கு முன், அந்த இடத்தில் சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் உப்பு தேய்த்து ஊறவையுங்கள். கறை சுலபமாக நீங்கும்.
பூச்சி கடித்த இடத்தில் அரிப்பு: ஒரு ஸ்பூனைச் சுடுநீரில் நனைத்து அந்த இடத்தில் வையுங்கள். வெப்பம் அரிப்பை உண்டாக்கும் புரோட்டீன்களைச் சிதைத்துவிடும்.
வெப்பக் காற்று மற்றும் தூசியால் கண்கள் சிவந்து எரியும்: வெள்ளரிக்காய் துண்டுகளை விட, பயன்படுத்திய குளிர்ந்த டீ பேக்-களை (Green Tea Bags) கண்களின் மேல் வையுங்கள். இதிலுள்ள 'டானின்' (Tannin) வீக்கத்தைக் குறைக்கும்.
வீடு கனலாகத் தகிப்பது தூக்கத்தைக் கெடுக்கும்: மாலை நேரங்களில் ஜன்னல் திரைச்சீலைகளை நனைத்துத் தொங்கவிடுங்கள் (Wet Sheet Hack). வெளியே இருந்து வரும் காற்று ஈரப்பதம் அடைந்து வீட்டிற்குள் ஏசி போன்ற குளிர்ச்சியைத் தரும்.
வாழைப்பழம் போன்ற பழங்கள் விரைவில் அழுகிவிடும்: வாழைப்பழத்தின் காம்புப் பகுதியை மட்டும் 'அலுமினியம் ஃபாயில்' (Aluminum Foil) கொண்டு சுருட்டி வையுங்கள். இது எத்திலின் வாயு வெளியேறுவதைத் தடுத்து பழங்களை நீண்ட நாள் புத்துணர்ச்சியுடன் வைக்கும்.