நான்சி மலர்
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்களில் மறைந்துள்ள ரசாயனங்களை (Chemicals - Toxic Products) தவிர்த்து, அவற்றுக்கு மாற்றாக ஆரோக்கியமான இயற்கை பொருட்களை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
குளிர்பானங்களில் அதிகப்படியான சர்க்கரையும் அமிலமும் (Acid) இருக்கும். தாகத்திற்கு இளநீர், மோர், பதநீர், பழச்சாறுகளை அருந்துவதே மிகச்சிறந்த ஆரோக்கியம்.
வீட்டைத் துடைக்கப் பயன்படுத்தும் ரசாயனத் திரவங்களுக்குப் பதில், தண்ணீரில் சிறிதளவு மஞ்சள் தூள், கல் உப்பு அல்லது வினிகர் கலந்து துடைத்தால் கிருமிகள் அழியும்.
கொசு வத்திகளில் இருந்து வரும் புகை நுரையீரலைப் பாதிக்கும். இதற்குப் பதில் வேப்ப எண்ணெய் விளக்கு ஏற்றுவது, நொச்சி இலை, சாம்பிராணி புகை போடுவது பாதுகாப்பானது.
நான்-ஸ்டிக் பாத்திரங்களில் உள்ள டெஃப்லான் பூச்சு சூடாகும்போது நச்சுக்காற்றை வெளியேற்றும். இதற்கு மாற்றாக இரும்புச் சட்டி (Cast Iron), மண் பாத்திரங்களைப் பயன்படுத்துவது உணவில் இரும்புச்சத்தை அதிகரிக்கும்.
ஷாம்புவில் உள்ள சல்பேட்டுகள் தலைமுடியை வறட்சியாக்கும். சீயக்காய் அல்லது பூந்திக்கொட்டை கொண்டு தலைமுடி அலசுவது கூந்தல் வளர்ச்சிக்கு உதவும்.
சோப்பில் உள்ள காஸ்டிக் சோடா, செயற்கை நறுமணத்தைத் தவிர்க்க, பாசிப்பயறு மாவு, கடலை மாவு, நலங்கு மாவு தேய்த்துக் குளிப்பது சருமத்திற்குப் பொலிவைத் தரும்.
பிளாஸ்டிக்கில் உள்ள BPA ரசாயனம் தண்ணீரில் கலக்க வாய்ப்புள்ளது. இதற்கு மாற்றாக செம்பு (Copper) பாட்டில்கள், மண் பானை தண்ணீரைப் பயன்படுத்தினால் நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.
அதிக வெப்பத்தில் ரசாயனங்கள் கலந்து சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்க்குப் பதில், சத்துக்கள் குறையாத மரச்செக்கு நல்லெண்ணெய், கடலை எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது இதயத்திற்கு நல்லது.
வெள்ளை சர்க்கரையைச் சுத்திகரிக்கப் பயன்படும் சல்பர் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும். அதற்குப் பதில் நாட்டுச்சர்க்கரை, பனை வெல்லம், தேனை சர்க்கரைக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம்.
பற்பசையில் உள்ள ஃவுளூரைடு (Fluoride) மற்றும் நுரை வர உதவும் SLS ஆகியவற்றைத் தவிர்க்க, வேப்பங்குச்சி, ஆலங்குச்சி, கிராம்பு, உப்பு கலந்த மூலிகை பல்பொடிகளைப் பயன்படுத்தலாம்.