உங்கள் வீட்டை ஐஸ் பெட்டி போல மாற்றும் அந்த 10 மாயாஜால வண்ணங்கள்!

நான்சி மலர்

1/10. Pure White- வெள்ளை நிறம் சூரிய ஒளியை அப்படியே பிரதிபலிக்கும் தன்மை கொண்டது. இது வெப்பத்தை உறிஞ்சாமல் சுவர்களைக் குளிர்ச்சியாக வைத்திருக்கும்.

Pure White

2/10. Ice Blue- நீல நிறம் இயல்பாகவே குளிர்ச்சியான உணர்வைத் தரும். மிகவும் மெல்லிய நீல நிறம் அறையின் வெப்பநிலையைக் குறைப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கும்.

Ice Blue

3/10. Mint Green- இயற்கையோடு இணைந்த இந்த நிறம் கண்களுக்குக் குளிர்ச்சியையும், மனதிற்கு நிம்மதியையும் தரும். இது காற்றோட்டமான உணர்வைத் தூண்டும்.

Mint Green

4/10. Soft Gray- மென்மையான சாம்பல் நிறம் நவீனமாகவும் இருக்கும், அதே சமயம் வெப்பத்தைத் தணிக்கவும் உதவும்.

Soft Gray

5/10. Pale Pink- மென்மையான பிங்க் நிறம் அறையை இதமாக வைத்திருக்கும். இது சூரிய ஒளியின் தீவிரத்தைக் குறைத்து காட்டும்.

Pale Pink

6/10. Pale Yellow- வெள்ளை கலந்த மஞ்சள் நிறம் அறைக்கு ஒரு பிரகாசத்தைத் தரும், ஆனால் வெப்பத்தை அதிகரிக்காது.

Pale Yellow

7/10. Seafoam Green- கடல் மற்றும் நீர்நிலைகளை நினைவுபடுத்தும் இந்த நிறம், கோடை வெயிலுக்கு மிகச்சிறந்த தேர்வாகும்.

Seafoam Green

8/10. Peach- மிதமான பீச் நிறம் அறையை அகலமாகவும், குளிர்ச்சியாகவும் காட்டும் தன்மை கொண்டது.

Peach

9/10.Lavender- ஊதா நிறத்தின் மென்மையான வடிவம் இது. இது மன அழுத்தத்தைக் குறைப்பதோடு, அறையை அமைதியாகவும் குளிர்ச்சியாகவும் உணரச் செய்யும்.

Lavender

10/10. Cream White- உங்களுக்குப் பளபளப்பான வெள்ளை பிடிக்கவில்லை என்றால், கிரீம் நிறத்தைத் தேர்வு செய்யலாம். இது வெப்பத்தைப் பிரதிபலிப்பதில் வெள்ளைக்கு அடுத்தபடியாகச் சிறப்பாகச் செயல்படும்.

Cream White-
summer healthy tips!
பாட்டி சொன்ன இந்த டிப்ஸ் போதும்... கோடை வெயில் உங்களை ஒன்றும் செய்யாது!