பாட்டி சொன்ன இந்த டிப்ஸ் போதும்... கோடை வெயில் உங்களை ஒன்றும் செய்யாது!

எஸ்.ராஜம்

1/11. மண்பானையை சுற்றி ஈரத்துணியை நனைத்து பிழிந்து கட்டி விட, தண்ணீர் ஜில்லென்று இருக்கும்.

pot

2/11. கற்கண்டு, தூய்மையான சந்தனம்,1டீஸ்பூன் இவற்றை வெற்றிலையோடு சாப்பிட வெயிலால் ஏற்படும் வயிற்று வலி,,சன்ஸ்ட்ரோக் உபாதைகளை வரவிடாமல் தடுக்கும்.

betel leaves

3/11. மருதாணி இலைகளை அரைத்து கை, பாதங்களில் வைத்து கொண்டு பின் கழுவி விட உடல் குளிர்ச்சியாக இருக்கும்.

henna leaf

4/11. படுக்கும் முன் உள்ளங்காலில் விளக்கெண்ணை தொட்டு மசாஜ் செய்து விட்டு படுக்க உடல்சூடு குறையும்.

oil massage

5/11. சோப்பிற்கு பதில் நலுங்கு மாவு, பாசிப்பயறு மாவு உபயோகிக்க சரும நோய்கள் வராமல் இருக்கும்.

bathing

6/11. பவுடர், வியர்க்குரு பவுடர் போடாமல் மாய்ச்சுரைசர்,லோஷன் உபயோகிக்க உடலுக்கு புத்துணர்ச்சி கிடைப்பதோடு குளிர்ச்சியையும் தரும்.

moisturizer

7/11. வடிகஞ்சி, பழைய சோறு மோருடன் சேர்த்து அருந்த உடல் உஷ்ணம் ஏற்படாது. வெப்ப நோய்கள் வராது.

fermented rice

8/11. பல காய்கறி கூட்டு, கீரை கடையல் போன்றவை வயிற்றுக்கு இதமளிக்கும்.

keerai


9/11. இந்த கோடையில் அதிக காரம், மசாலா இல்லாமல் சாப்பிட வேண்டும்.

masala

10/11. தர்பூசணி சாப்பிட இந்த சீசனில் உகந்தது என்றாலும் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

watermelon

11/11. வெள்ளரியை அப்படியே சாப்பிடுவது நல்லது. குழந்தைகளுக்கு , ரய்த்தாகவாக கொடுக்க உடல் குளிர்ச்சி அடைவதோடு மலச்சிக்கல் பிரச்சினை வராது.

cucumber
Crude Oil
>கச்சா எண்ணெய்: நீங்கள் அறியாத 10 சுவாரஸ்யமான உண்மைகள்!