மாம்பழப் பிரியர்களே! இந்தக் கோடையில் நீங்கள் ருசிக்க வேண்டிய 'டாப் 10' பட்டியல் இதோ!

நான்சி மலர்

இந்தக் கோடையில் நீங்கள் கண்டிப்பாக ருசிக்க வேண்டிய 10 முக்கிய மாம்பழ வகைகள் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

mango | credit mashed

அல்போன்சா 'மாம்பழங்களின் ராஜா' என்று அழைக்கப்படுகிறது. குங்குமப்பூ நிறத்தில், மிகவும் இனிப்பாகவும், நல்ல வாசனையுடனும் இருக்கும். இதன் சதைப்பகுதி வெண்ணெய் போல மென்மையாக இருக்கும்.

alphonso | credit amazon.in

இமாம் பசந்த் தென்னிந்தியாவின் மிகவும் உயர்தரமான வகை இது. அளவில் பெரியதாக இருக்கும் இதில் நார் சத்து இருக்காது. சாப்பிட்டு முடித்த பிறகும் இதன் சுவை நாவிலேயே தங்கியிருக்கும்

Imam pasand | credit uzhavar kalam

பங்கனப்பள்ளி ஆந்திராவைப் பிறப்பிடமாகக் கொண்டாலும், தமிழ்நாட்டில் இது மிகவும் பிரபலம். நீளமான வடிவம், மெல்லிய தோல் மற்றும் சதைப்பற்று அதிகம் கொண்ட இந்த பழம் மிகவும் இனிப்பானது.

banganapalli | credits golden hill hall

மல்கோவா பழங்காலத்திலிருந்தே தமிழர்களின் விருப்பமான வகை இது. உருண்டையான வடிவம் கொண்ட இந்த பழம், தேன் போன்ற இனிப்பு சுவையைக் கொண்டது. இதில் நார் அறவே இருக்காது.

malgova | credit breeds of kerel

செந்தூரா இதன் தோலில் ஆங்காங்கே சிவப்பு நிறம் கலந்திருப்பதால் இப்பெயர் பெற்றது. மற்ற வகைகளை விட சீக்கிரமாகவே சந்தைக்கு வரும் இந்த பழம், மலிவான விலையிலும் நல்ல இனிப்பாகவும் இருக்கும்.

senthura | credit ARI MANGO FARM

நீலம் சிறிய வடிவம் மற்றும் பிரகாசமான மஞ்சள் நிறத்தில் இருக்கும். கோடைக்காலத்தின் இறுதியில் தான் இது அதிகளவில் கிடைக்கும். இதன் மணம் மிகவும் வலுவானது.

neelam | credit Aamrai

ருமானி பார்க்க ஆப்பிள் போலவே உருண்டையாக இருக்கும். இதன் தோல் பச்சை கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும். தனித்துவமான சுவையும், அதிக சாறு நிறைந்த சதைப்பகுதியும் இதன் சிறப்பு.

rumani | credit Royals plants

கிளி மூக்கு இதன் நுனிப்பகுதி கிளியின் மூக்கைப் போல வளைந்து இருப்பதால் இப்பெயர் பெற்றது. இது சற்று புளிப்பும் இனிப்பும் கலந்த சுவையில் இருக்கும். ஊறுகாய் போடவும், பச்சையாக உப்பு-மிளகாய் தூள் சேர்த்து சாப்பிடவும் இதுவே சிறந்தது.

kili mooku | credit amazon.in

கலப்பாடி அளவில் சிறியதாக இருந்தாலும், அதிக இனிப்பு கொண்டது. பழுத்த பின்பும் இதன் தோல் பச்சை நிறமாகவே இருக்கும். பாரம்பரியமான சுவையை விரும்புபவர்களுக்கு இது பிடிக்கும்.

kalapadi | credit amazon.in

ஜவாது ஒரு அரிய வகை மாம்பழம். இதன் வாசனை மிகவும் அபாரமாக இருக்கும். மிதமான இனிப்பும், சிறந்த மணமும் கொண்டது.

javadhu | credit Grocery D2D online
Mango
கெமிக்கல் இல்லாத நல்ல மாம்பழத்தை வாங்குவது எப்படி? ரகசியங்கள் இதோ!