நான்சி மலர்
வீட்டில் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நாம் தவிர்க்க வேண்டிய அல்லது கவனமாகப் பயன்படுத்த வேண்டிய 10 முக்கிய பொருட்கள் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
பிளாஸ்டிக்கில் உள்ள BPA போன்ற வேதிப்பொருட்கள் உணவில் கலந்து ஹார்மோன் குறைபாடுகளை ஏற்படுத்தும். குறிப்பாக சூடான உணவுகளை பிளாஸ்டிக்கில் வைப்பதைத் தவிர்க்கவும்.
நான்-ஸ்டிக் பாத்திரங்களில் உள்ள Teflon (PTFE) பூச்சு அதிக வெப்பமடையும் போது நச்சுப் புகையை வெளியேற்றும். பூச்சு உரிந்த பாத்திரங்களைப் பயன்படுத்தவே கூடாது.
வீட்டில் பயன்படுத்தும் Air Fresheners ல் உள்ள Phthalates சுவாசப் கோளாறுகளை உண்டாக்கும்.
வீட்டில் கரப்பான் பூச்சி அல்லது எறும்புகளைக் கொல்லப் பயன்படுத்தும் ஸ்ப்ரேக்கள் குழந்தைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்.
அதிகப்படியான நுரை தரும் டிடர்ஜென்ட்களில் உள்ள பாஸ்பேட் (Phosphates) சரும பாதிப்புகளை உண்டாக்கும்.
பீரோக்களில் பயன்படுத்தப்படும் அந்துருண்டைகளில் Naphthalene உள்ளது. இது கல்லீரல் மற்றும் சிறுநீரகத்திற்குத் தீங்கு விளைவிக்கும்.
பல வருடங்களாகப் பயன்படுத்தும் மெத்தைகளில் 'Dust Mites' எனப்படும் கண்ணுக்குத் தெரியாத பூச்சிகள் பெருகும். இவை ஆஸ்துமா மற்றும் அலர்ஜியை உண்டாக்கும்.
Antibacterial Soaps ல் உள்ள Triclosan உடலுக்குத் தேவையான நல்ல பாக்டீரியாக்களையும் அழித்துவிடும். சாதாரண சோப்பு மற்றும் தண்ணீரே போதுமானது.
Bleach & Ammonia தரையைத் துடைக்கப் பயன்படுத்தும் வீரியம் மிக்க திரவங்கள் கண்களையும், நுரையீரலையும் பாதிக்கும்.
பழைய மேக்கப் பொருட்கள் மற்றும் கிரீம்களில் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு சருமத்தில் தடிப்புகள் மற்றும் முகப்பருக்களை உண்டாக்கும்.