புவனா நாகராஜன்
'காதல்' என்பது வெறும் உணர்ச்சி மட்டுமல்ல, அது இரண்டு ஆன்மாக்களுக்கு இடையிலான ஒரு புனிதமான பிணைப்பு.
காதல் புனிதமானது, அதையும் தாண்டி தெய்வீகமானது!
ஒரு முறை யூஸாகும் டிஸ்யூ பேப்பரல்ல காதல், பலமுறை துடிக்கும் இனிய இதயசஞ்சிகை!
காதலுக்கு வயதில்லை அது ஆயுள் பாலிசி,
அது புதுப்பிக்கப்பட்ட கேஒய்சி.
காதல் வெற்று காகிதமல்ல, கசக்க முடியா கருமேகம்!
அன்பு மழை பொழியும் ஆனந்த மேகம், அதில் சிலிா்ப்பதே இளசுகளின் தேகம்!
வயது பாா்த்து வருவதில்லை காதல்.
காதல் ஒரு தெளிந்த நீரோடை, அது கொடுக்கிறதோ நறுமண வாடை!
காதல் ஒரு வாடாமலர். கோடையிலும், வதங்கா வண்ணமலர்!
பிாிக்க முடியா நீரோடை, வற்றாத பாலாடை!
காதலுக்கு காட்டுங்கள் பச்சைக்கொடி. அது என்றும் வாசம் தரும் நறுமண மலர் தரும் பூச்செடி!
வாசமுள்ள பூக்களை வாசம் கெட வைக்காதீா், அதனை காலில் போட்டு துவைக்காதீா்!
கண்கள் பாா்த்து கருவிழியாய் வந்த காதல், அதற்கில்லை வாழ்நாளில் சாதல்!
காதல் ஒரு தேச விரோதமல்ல, மாறாக நேசம் வளர்க்கும் நல்லுறவு!
நாலு கண்கள் சாட்சியாய் இரண்டு இதயங்களால் மலர்ந்தது காதல்!
காதலிக்கலாம் தவறல்ல, கண்ணியமான காதலாயின் கவலையில்ல!
காதல் எனும் பயிா்வளர பாசமெனும் தண்ணீா் போதும் !
வாழ விடுங்கள் வாலிபம் தொடங்கி வளரும் காதலை, வயோதிகம் வரையிலும் அணையாத தீயாய் பரவிடுமே!
எங்கள் காதல் லிவ்விங் டுகெதர் அல்ல, மாறாக மனதில் ஒளிரும் லைப் லாங் பவர்!