யார் பார்த்தாலும் வியந்து போற்றும் புத்தம் புதிய தீபாவளி கோல டிசைன்கள் இதோ!

இந்திரா கோபாலன்

Rangoli designs

1. மயில் ரங்கோலி: நுழைவாயிலில் பிரகாசமான வண்ணங்களால் மயிலை வரைந்து வண்ணமயமான தோற்றத்தை உருவாக்கலாம்.

Rangoli designs | Gemini image

2. ​சௌக் பூர்ணம் ரங்கோலி: கோதுமை மாவு, குங்குமம் மற்றும் மஞ்சள் பயன்படுத்தி வரையப்படும் இது, அனைத்து கடவுள்களையும் மகிழ்விக்கக்கூடிய எளிமையான மற்றும் மங்களகரமான கோலமாகும்.

Rangoli designs | Gemini image

3. ​பூ இதழ் ரங்கோலி: ரோஜா, சாமந்தி மற்றும் தாமரைப் பூக்களைக் கொண்டு அலங்கரிக்கப்படும் இந்த ரங்கோலி மிகவும் கவர்ச்சியாகத் தெரியும்.

Rangoli designs | Gemini image

4. சம்ஸ்கார் பாரதி ரங்கோலி: மகாராஷ்டிராவில் தோன்றிய சிக்கலான வடிவங்களைக் கொண்ட கோலம் இதுவாகும். வட்டங்களில் வண்ணங்களை நிரப்பி மெல்லிய கோடுகளால் உருவாக்கப்படுகிறது.

Rangoli designs | Gemini image

5. தண்ணீரில் ரங்கோலி: அகல் விளக்குகள், மெழுகுவர்த்திகள் மற்றும் பூக்களைப் பயன்படுத்தி தண்ணீருக்குள் இந்த வடிவங்களை அழகாக அமைக்கலாம்.

Rangoli designs | Gemini image

6. தானிய ரங்கோலி: பாசிப்பருப்பு, பீன்ஸ், கோதுமை மற்றும் உடைந்த பட்டாணி போன்ற வண்ணமயமான பருப்பு வகைகளைக் கொண்டு இடப்படும் வித்தியாசமான கோலம்.

Rangoli designs | Gemini image

7. மாவிலை மற்றும் சாமந்தி பூக்கள்: லட்சுமி தேவியின் அடையாளமாகக் கருதப்படும் மங்களகரமான மாவிலைகளையும், பூக்களையும் சேர்த்து பூ வடிவில் உருவாக்கலாம்.

Rangoli designs | Gemini image

8. அகல் விளக்கு தாமரை ரங்கோலி: அகல் விளக்குகள் மூலம் தாமரை வடிவத்தை அமைத்து கவர்ச்சிகரமான மற்றும் அதிர்ஷ்டத்தைத் தரக்கூடிய அமைப்பைக் கொண்டு வரலாம்.

Rangoli designs | Gemini image

9. விநாயகர் ரங்கோலி: சிவப்பு ரோஜா இதழ்களால் விநாயகர் வடிவத்தையும், வெள்ளை இதழ்களால் கிரீடத்தையும் அமைத்து பசுமையான இலைகளால் அழகுபடுத்தலாம்.

Rangoli designs | Gemini image

10. ஸ்வஸ்திக் ரங்கோலி: ஸ்வஸ்திக் கோலத்தை வரைந்து அதன் மேல் அகல் விளக்குகளை வைப்பதன் மூலம் நல்ல ஆற்றல்களை வீட்டிற்குள் ஈர்க்கலாம்.

Rangoli designs | Gemini image
Deepavali decoration | Gemini image
10 ரூபாய்ச் செலவுமில்லாமல், பழைய பொருட்களை வைத்து பிரம்மாண்டமான தீபாவளி தோரணம்!