எஸ்.ராஜம்
குழந்தைகள் போடும் சாக்ஸ் லூஸாகி விட்டால், சாக்ஸ் ஓரத்தில் அதன் சுற்றளவுக்கு ஏற்றபடி ரப்பர் பேண்டை வைத்து உருட்டி தைத்துவிட்டால் ஓரம் தொய்ந்து போகாமல் காலை அழுத்தமாக பிடித்துக் கொள்ளும்.
வீட்டிற்கு விலை உயர்ந்த மார்பிள் கற்களைப் பதித்துள்ளீர்களா? அவற்றைக் கொஞ்சம் பால் கொண்டு துடைத்திட பளபளப்பாகவும், கறைகளின்றியும் இருக்கும்.
தேங்காய் வெளிப்புறத்தில் வெள்ளையாகவும், அதன் குடுமிப் பகுதிகள் ஒன்றோடு ஒன்று ஒட்டிய படியும் இருக்க வேண்டும். அப்போது தான் அது இளசானதாக இருக்கும். இல்லையென்றால் முற்றியதாகவோ, கொப்பரையாகவோ இருக்கும்.
ஜின்ஸ் பேண்ட்டுகளைத் துவைக்கும் போது, கடைசியாக அலசும் தண்ணீரில் கொஞ்சம் வினிகர் கலந்து அலசினால் சாயம் போகாமலிருக்கும்.
செலோடேப்பின் நுனியைக் கண்டு பிடிக்க முடிய வில்லையா? அதை சிறிது நேரம் பிரிட்ஜினுள் வைத்து எடுத்தால் சுலபமாகப் பிரிக்க வரும்.
சில துளிகள் நெயில் பாலிஷ் ரிமூவரை எடுத்துப் பஞ்சில் நனைத்து வீட்டின் சுவிட்சு போர்டுகளைத் துடைக்க, அவை புதிது போலப் பளபளக்கும்.
பிளாஸ்டிக் டப்பாக்கள் வீணாகிப் போனால் பாதிக்கு மேல் வெட்டி (மேல் பாகத்தை) விட்டு குப்பைக் கூடையாக உபயோகிக்கலாம்.
புது செருப்பின் மேல் பாகத்துத் தோலின் அடிப்பாகத்தில் மெழுகுவர்த்தியை நன்றாகத் தேய்த்து, பிறகு அணிந்து கொண்டால் செருப்பு கடிக்கவே கடிக்காது.
துணி பீரோவை சுத்தம் செய்யும்போது முதலில் பீரோ தட்டுகளில், பயன்படுத்திய கொசுமேட்டை ஐந்தாறு பரப்பி அதன் மேல் பேப்பர் போட்டுத் துணியை அடுக்கினால் ஒரு வருடம் வரை பூச்சிகள் நெருங்காது.
கொசு தொல்லைக்காகப் போடப்பட்டுள்ள நெட்லானில் சிறிய துளைகள் ஏற்பட்டு விட்டால், செலோடேப் கட் பண்ணி ஒட்டலாம்.