நான்சி மலர்
Fragrance in home:
1. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் எலுமிச்சைத் துண்டுகள், லவங்கப்பட்டை, கிராம்பு மற்றும் புதினா இலைகளைச் சேர்த்து குறைந்த தீயில் கொதிக்க வைத்தால் வீடு முழுவதும் நல்ல வாசம் பரவும்.
2. மாலையில் சாம்பராணி புகை போடுவது அல்லது சிறிதளவு கற்பூரம் ஏற்றுவது வீட்டின் துர்நாற்றத்தைப் போக்கி ஆன்மீக நறுமணத்தைத் தரும்.
3. டிஃப்பியூஸரில் (Diffuser) லாவெண்டர், லெமன்கிராஸ் அல்லது சந்தன எண்ணெய் சில துளிகள் சேர்த்துப் பயன்படுத்தலாம்.
4. சமையலறை அல்லது ஃபிரிட்ஜில் உள்ள துர்நாற்றத்தைப் போக்க, சிறிய கிண்ணத்தில் காபி தூள் அல்லது பயன்படுத்திய காபி கொட்டைகளை வைத்துவிடலாம்.
5. மல்லிகை, புதினா அல்லது துளசி போன்ற தாவரங்களை வீட்டுக்குள் வளர்ப்பது இயற்கையான புத்துணர்ச்சியைத் தரும்.
6. தினமும் காலையிலும் மாலையிலும் ஜன்னல்களைத் திறந்து நல்ல காற்றோட்டமும் சூரிய வெளிச்சமும் வீட்டிற்குள் வர வழிசெய்ய வேண்டும்.
7. ஈரமான துணிகளை வீட்டுக்குள் அதிக நேரம் வைக்காமல் உடனுக்குடன் காயவைப்பது பூஞ்சை துர்நாற்றத்தைத் தடுக்கும்.
8. குப்பைத் தொட்டியின் அடியில் சிறிதளவு பேக்கிங் சோடா தூவி வைத்தால் துர்நாற்றம் கட்டுப்படும். தினமும் குப்பையை அகற்றுவது அவசியம்.
9. திரைச்சீலைகள், சோஃபா உரைகள் மற்றும் கார்பெட்களைத் தவறாமல் துவைத்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
10. கார்பெட்டுகள் அல்லது சோஃபாவில் பேக்கிங் சோடாவைத் தூவி, 15 நிமிடங்கள் கழித்து வேகக்யூம் (Vacuum) செய்தால் துர்நாற்றம் நீங்கும்.