ஜி.எஸ்.எஸ்.
முட்டையிலுள்ள ஊட்டச்சத்து பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். முட்டை ஓடுகளும்கூடப் பலவிதத்தில் ஏற்கனவே பயன்பட்டு வருகின்றன.
கோழிகளுக்கு அவை உணவாகலாம்.
வீட்டில் எங்கே பூச்சிகள் தொல்லை அதிகம் இருக்கிறதோ அந்தப் பகுதியில் உடைக்கப்பட்ட முட்டை ஓடுகளைப் பரப்பி வைத்தால் பூச்சிகள் கூரான முனைகளைக்கொண்ட அந்த ஓடுகள் மீது ஊர்வதைத் தவிர்த்துவிடும்.
தாவரங்களுக்குச் சிறந்த எருவாகவும் இது பயன்படுகிறது.
தாவரங்களைச் சுற்றிலும் முட்டை ஓடுகளைத் தெளித்தால் அந்தத் தாவரங்களுக்கு கால்ஷியம் குறைபாடு இருக்காது.
உலகின் சில பகுதிகளில் முட்டை ஓடுகளை நன்கு பொடி செய்து காபியில் கலந்து கொடுக்கிறார்கள்லாம். இதனால் காபியின் சுவை கூடுகிறது என்கிறார்கள்.
முட்டை ஓடுகளைக்கொண்டு பற்பசைகூடத் தயாரிக்கப்படுகிறது. கூடவே இதில் தேங்காய் எண்ணெய், பேகிங் சோடா போன்றவையும் கலக்கப்படுகின்றன.
முட்டை ஓடுகளால் வேறொரு ஒரு வித்தியாசமான பயன்பாடும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவிலுள்ள மாஸசூஸெட்ஸ் லோவெல் பல்கலைக்கழகத்தில் ஓர் ஆராயச்சிக் குழு செய்த முடிவு மருத்துவ உலகில் புதியதொரு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.
முட்டை ஓடுகள் புதிய, உறுதியான எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவும் என்று அங்குள்ள விஞ்ஞானிகள் குழு ஒன்று கண்டுபிடித்திருக்கிறது.