அளவற்ற அழகு: உலகின் 10 அரிய, அழகிய வைரங்கள்!

நான்சி மலர்

உலகின் விலை மதிப்பற்ற வைரம் என்றால் அது கோஹினூர் வைரம் தான். கோஹினூர் என்றால் 'ஒளி மலை' என்று அர்த்தம். நிறமில்லாத இந்த வைரக்கல் தற்போது பிரிட்டிஷ் மகுடத்தில் இருக்கிறது. 

Kohinoor diamond

உலகின் மிகவும் பிரபலமான Hope diamond தென்னிந்தியாவில் கண்டுப்பிடிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த வைரத்தை வைத்திருப்பவர்களுக்கு இது 'கெட்ட சகுனத்தைக் கொடுக்கும்' என்பது பலரது நம்பிக்கை.

Hope diamond

Moussaieff red diamond 5.11 கேரட் மட்டுமே கொண்ட சிகப்பு வைரமாகும். சிகப்பு வைரம் உலகிலேயே மிகவும் அரிதான வைரமாக கருதப்படுகிறது. 

Moussaieff red diamond

The cullinan Diamond தான் உலகிலேயே கிடைத்த வைரங்களில் மிகவும் பெரிய வைரம். இதன் எடை 3106 கேரட் ஆகும். இது மொத்தம் 105 துண்டுகளாக வெட்டப்பட்டு அதில் 9 துண்டுகள் பிரிட்டிஷ் மகுடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

The cullinan Diamond

The pink star diamond பிங்க் நிறத்தில் இருக்கும் மிக பெரிய வைரமாகும். இதன் எடை மற்றும் நிறம் இரண்டின் காரணமாகவே இந்த வைரம் பிரபலமாக உள்ளது. அதிக விலை கொடுத்து ஏலம் எடுக்கப்பட்ட வைரம்.

The pink star diamond

ஆரஞ்ச் வைரம் மிகவும் தனித்துவம் வாய்ந்த அரிதான வைரமாக கருதப்படுகிறது. இதை 'நெருப்பு வைரம்' என்றும் கூவார்கள். இது பார்ப்பதற்கு Pear வடிவத்தில் 14.82 கேரட் எடை கொண்டிருக்கிறது.

Orange diamond

The regent வைரம் இந்தியாவில் உள்ள Golconda வில் கண்டுப்பிடிக்கப்பட்ட வெளிர் நீல நிறத்திலான வைரமாகும். இந்த வைரம் நெப்போலியன் வாளிலும், Mary Antoinette ஆகியோரிடம் இருந்துள்ளது.

The regent diamond

The heart of eternity பிரபலமான இதய வடிவிலான நீல நிற வைரமாகும். டைட்டானிக் திரைப்படத்தில் வரும் Heart of the ocean ஐ பார்த்து Inspire ஆகி உருவாக்கப்பட்டது.

The heart of eternity diamond

The millennium star வைரம் Pear வடிவத்தில் 203.04 கேரட் எடைக்கொண்ட வைரமாகும். 2000 ஆம் ஆண்டு லண்டனில் காட்சிப்படுத்தப்பட்ட போது திருடப்பட்டு போலீசாரால் பத்திரமாக மீட்கப்பட்டது.

The millennium star diamond

The Tylor-burton வைரம் 69.42 கேரட் எடைக் கொண்டது. ஹாலிவுட் பிரபலமான எலிசபத் டைலருக்கு அவருடைய கணவரான ரிச்சர்ட் ப்ரூட்டன் ஆல் பரிசளிக்கப்பட்ட வைரம்.

The Tylor-burton diamond
Tamil uyir ezhuththukal
அகரவரிசையில் சிந்தனைத் துளிகள்!