ஆண்களுக்கு பெண் தோழி ஏன் அவசியம்? 10 முக்கிய காரணங்கள்!

கிரி கணபதி

1. பொதுவாக ஆண்கள் உலகத்தை ஒரு குறிப்பிட்ட கோணத்தில் பார்ப்பார்கள். ஆனா, ஒரு பெண் தோழி கூட இருக்கும்போது, விஷயங்களை பெண்கள் எப்படி அணுகுவாங்க, அவங்களோட உணர்வுகள் எப்படி இருக்கும்னு ஒரு புது கண்ணோட்டம் கிடைக்கும். இது வாழ்க்கைல பல விஷயங்களை இன்னும் நல்லா புரிஞ்சுக்க உதவும்.

Girlfriend

2. சமூகத்துல ஆண்கள் தங்கள் உணர்வுகளை மறைச்சு வைக்கணும்னு ஒரு எதிர்பார்ப்பு இருக்கு. ஆனா, ஒரு பெண் சிறந்த தோழிகிட்ட அவங்க எந்தவித பயமும் இல்லாம தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த முடியும். இது மனசுக்கு ஒரு பெரிய ரிலீஃபா இருக்கும்.

Girlfriend

3. காதல் உறவுகள்ல வர பிரச்சனைகள், காதலி அல்லது மனைவிகிட்ட எப்படி நடந்துக்கணும்னு தெரியாத நேரங்கள்ல, ஒரு பெண் தோழி ரொம்ப நல்லா கைடு பண்ணுவாங்க. ஏன்னா, அவங்களுக்கு பெண்களின் மனநிலை நல்லா தெரியும்.

Girlfriend

4. பொதுவாக ஆண்கள் வேகமா முடிவு எடுக்கிறவங்க. ஆனா, பெண்கள் விஷயங்களை இன்னும் பொறுமையா, யோசிச்சு அணுகுவாங்க. ஒரு பெண் தோழிகூட பழகும்போது, இந்த பொறுமையையும், விஷயங்களை ஆழமா யோசிக்கிற குணத்தையும் ஆண்கள் கத்துக்கலாம்.

Girlfriend

5. ஒரு பெண் தோழிகூட பழகும்போது, ஆண்களோட சமூக திறன்கள் மேம்படும். பெண்களுடன் எப்படி பேசணும், எப்படி பழகணும்னு கத்துக்குவாங்க. இது மற்ற பெண்களுடன் பழகுறதுக்கும், தொழில் ரீதியா மத்தவங்க கூட நல்ல உறவு வச்சிக்கிறதுக்கும் உதவும்.

Girlfriend

6. ஆண்கள் பல சமயங்கள்ல மனசுக்குள்ள பல பிரச்சனைகளை வச்சுப்பாங்க. ஒரு பெண் தோழி கிட்ட பேசும்போது, அவங்க தீர்ப்பு சொல்லாம, அக்கறையோட கேப்பாங்க. இது ஒரு பாதுகாப்பான உணர்வை கொடுக்கும்.

Girlfriend

7. ஒரு பெண் தோழி உங்களை முழுமையா புரிஞ்சிக்கிட்டு, உங்க பலவீனங்களையும், பலங்களையும் ஏத்துப்பாங்க. இது ஆண்களுக்கு ஒருவித தன்னம்பிக்கையை கொடுக்கும். "நான் எப்படி இருந்தாலும் அவ என்ன ஏத்துப்பா"ங்கிற எண்ணம் வரும்.

Girlfriend

8. ஆண்களுக்கு ஒரு பெண் சிறந்த தோழி இருக்கும்போது, பாலின பாகுபாடு (Gender Stereotypes) குறித்த அவங்களோட எண்ணங்கள் மாறும். பெண்கள் வெறும் அழகுக்காகவோ, சமையலுக்காகவோ மட்டும் இல்ல, அவங்க பல விஷயங்கள்ல ஆண்களுக்கு இணையா திறமையானவங்கன்னு புரிஞ்சுக்குவாங்க.

Girlfriend

9. ஆண்கள் பெரும்பாலும் கோபம், சண்டைன்னு பிரச்சனைகளை அணுகுவாங்க. ஆனா, பெண்கள் இன்னும் பக்குவமா, பேசி தீர்க்க முயற்சி பண்ணுவாங்க. ஒரு பெண் தோழி கிட்ட இருந்து, பிரச்சனைகளை எப்படி சமாதானமா கையாளணும்னு ஆண்கள் கத்துக்கலாம்.

Girlfriend

10. வாழ்க்கைல வர ஏற்ற தாழ்வுகள்ல ஒரு பெண் தோழி ஒரு உறுதுணையா இருப்பாங்க. ஒரு நல்ல கேட்பவராக இருப்பாங்க, ஆறுதல் சொல்லுவாங்க. இது ஆண்களுக்கு ரொம்பவே தேவைப்படும் ஒரு உணர்வுபூர்வமான ஆதரவு.

Girlfriend
Vinayagar
வெள்ளத்தில் இருந்து ஊரைக் காப்பாற்றிய விநாயகர்... இவருக்கு இப்படி ஒரு பெயரா?